ரிஷபம் ஆனி மாதம் ராசி பலன்கள் 2018!

ரிஷபம் ராசியினருக்கு இந்த ஆனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாக இருக்கப் போகின்றது. கடகத்தில் சுக்கிரன் ராகுவுடன் இணைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ராசிநாதன் சுக்கிரன் ராகுவுடன் இணைத்து வலுவிழப்பதால் சுமாரான பலன்களே நடைபெறும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். இல்லத்தில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சனி இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் பேச்சில் கவனம் தேவை. ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம், வெளிநாடு செல்வது போன்ற அமைப்பு ஏற்படக்கூடும். படித்து முடித்தும் வேலை கிடைக்காமல்
 
Rishabam aani rasi palan 2018

ரிஷபம் ராசியினருக்கு இந்த ஆனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாக இருக்கப் போகின்றது. கடகத்தில் சுக்கிரன் ராகுவுடன் இணைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ராசிநாதன் சுக்கிரன் ராகுவுடன் இணைத்து வலுவிழப்பதால் சுமாரான பலன்களே நடைபெறும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். இல்லத்தில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சனி இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் பேச்சில் கவனம் தேவை.

ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம், வெளிநாடு செல்வது போன்ற அமைப்பு ஏற்படக்கூடும். படித்து முடித்தும் வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு ஜூலை 5-ம் தேதிக்கு பிறகு நல்ல வேலை அமையும்.

சாதரணமாக பேசும் வார்த்தைகள் கூட சண்டை, சச்சரவு என்று முடிந்த விடும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். வருமானம் வருவது போன்று தோன்றினாலும் ஆனி  மாதம் இறுதியில் செலவுகள் அதிகமாகும். எட்டில் சனி பகவான் இருப்பதால் உங்களுக்கு எரிச்சலும், கோபமும் வரக்கூடிய சம்பவங்கள் நிகழும்.

கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எச்சரிக்கையுடன், கவனமுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக பண விஷயத்தில் கவனம் தேவை. வருகின்ற குரு பெயர்ச்சிக்குப் பிறகு அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.  ஆனி மாதம் தொடக்கத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் மாத இறுதியில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

From around the web