விருச்சிகம் செப்டம்பர் மாத ராசி பலன் 2018!

அன்புள்ள விருச்சிகம் ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கின்ற மாதமாக இருக்கும். சூரியன் 10-ம் வீட்டில் ஆட்சி பலத்துடன் இருப்பதால் தொழில், வியாபாரம், வேலை சிறப்பாக இருக்கும். சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது இல்லத்தில் சுப விரயங்கள் உண்டாகும். சுக்கிரன் குருவுடன் இணைந்து 12-ம் வீட்டில் இருப்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்து கொண்டே இருக்கும். மகளுக்கு அல்லது மகனுக்கு நல்ல வரன் அமையவில்லையே,
 
Viruchigam september matha rasi palan 2018

அன்புள்ள விருச்சிகம் ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கின்ற மாதமாக இருக்கும். சூரியன் 10-ம் வீட்டில் ஆட்சி பலத்துடன் இருப்பதால் தொழில், வியாபாரம், வேலை சிறப்பாக இருக்கும். சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது இல்லத்தில் சுப விரயங்கள் உண்டாகும்.

சுக்கிரன் குருவுடன் இணைந்து 12-ம் வீட்டில் இருப்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்து கொண்டே இருக்கும். மகளுக்கு அல்லது மகனுக்கு நல்ல வரன் அமையவில்லையே, தள்ளி போய்க் கொண்டே இருக்கிறதே திருமணம் என்று இருந்தவர்களுக்கு நல்ல வரன் இல்லம் தேடி வரக்கூடும்.

செப்டம்பர் 6-ம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சொத்து சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதால் திட்டமிட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிலருக்கு உபரி வருமானம் வரக்கூடும். புகழ், செல்வாக்கு உயரக்கூடும். திறமை பளிச்சிடும்.

சிம்ம ராசியில் புதன் சஞ்சரிக்கும் பொழுது தடைபட்ட விஷயங்கள் தங்கு தடையில்லாமல் நடைபெறக்கூடும். புதன் சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகம் உருவாகுவதால் அரசு சார்ந்த விஷயங்களில் நல்ல செய்தி வரக்கூடும். செப்டம்பர் 15-ம் தேதி புதன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இது ஒரு பொன்னான நேரம் என்றே கூறலாம். வங்கி சேமிப்பு உயரும்.

சனி வக்ர நிவர்த்தியாகி இருப்பதால் இல்லத்தில் இருப்பவர்களிடம் இருந்து வந்த மனக்குழப்பங்கள் அகலும். உங்கள் ராசிக்கு 3,4-ம் இடங்களின் அதிபதியான சனி பகவான் தன ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு பல வகையில் வரக்கூடும். உடல்நலனில் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். எதிரிகள் விலகுவர். சிலருக்கு வாகனம், விலையுர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் அமையக்கூடும். சிலருக்கு பணவரவு சீராக வந்து கொண்டே இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும். எந்த காரியங்கள் செய்ய தொடங்கினாலும் சற்று அலைச்சலுடன் முடிக்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும்.

From around the web