விருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2018!

குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு அக்டோபர் மாதம் 11-ம் தேதி பெயர்ச்சி ஆகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5-ஆம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் பெயர்ச்சியாகி வர போகின்றார். இந்த குரு பெயர்ச்சியினால் நன்மை பெரும் ராசியில் விருச்சிகமும் ஒன்று. உங்களது ராசியில் இருந்து குரு 5,7,9 ஆம் வீட்டை பார்க்க இருக்கின்றார். பொது பலன்கள் : இதுவரை ஏழரைச்சனியால் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த
 
Viruchigam guru peyarchi palangal 2018 - 2019

குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு அக்டோபர் மாதம் 11-ம் தேதி  பெயர்ச்சி ஆகின்றார். உங்கள்  ராசிக்கு 2, 5-ஆம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் பெயர்ச்சியாகி வர போகின்றார். இந்த குரு பெயர்ச்சியினால் நன்மை பெரும் ராசியில் விருச்சிகமும் ஒன்று. உங்களது ராசியில் இருந்து குரு 5,7,9 ஆம் வீட்டை பார்க்க இருக்கின்றார்.

பொது பலன்கள் :

இதுவரை ஏழரைச்சனியால் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் மனதில் தெளிவு பிறக்கும். ஜென்மத்தில் குரு இருப்பதால் உங்களது இருளை போக்கி யாரு நல்லவர்கள், தீயவர்கள் என்பதை இனம் கண்டு விலகி விடுவீர்கள். மறைந்து கிடந்த உங்களது திறமைகள் வெளிப்படக்கூடும். வீண் செலவுகள் ஏற்படாதவாறு புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள்.

ஜென்மத்தில் இருக்கும் குரு உங்களது ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால் பிள்ளைகளின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வம்ச விருத்தியை ஏற்படுத்தப்போகின்றது. கடந்த ஐந்து வருடங்களாக முயற்சி செய்தும் மகளுக்கு அல்லது மகனுக்கு ஏற்ற வரன் அமையவில்லையே என்று இருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். புனித ஸ்தல யாத்திரைகளுக்கு செல்லும் பாக்கியம் கிட்டும். குடும்பத்துடன் புகழ் பெற்ற கோவில்களுக்கு சென்று வருவீர்கள். குலதெய்வ வழிபாடு சிறப்பாக செய்வீர்கள்.

அடுத்து குருவின் பார்வை 7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமண தடை விலகும். குருவின் பார்வை 9-ம் இடத்தில்  விழுவதால் நினைத்த காரியத்தை நினைத்தபடி முடித்து விடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும், செலவுகள் குறையும். உங்கள் கைக்கு தாராளமான பணவரவு இருப்பதால் புத்திசாலித்தனமாக சேமிக்க தொடங்குவீர்கள்.

ஏழரைச்சனி காலத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் எல்லாம் ஈடு செய்யும் விதத்தில் மிகப்பெரிய அளவில் வருமானம் வர போகின்றது. அவரவர்களின் வருவாய்க்கு ஏற்ற படி பணவரவு அதிகரிக்க போகின்றது. செல்வச்செழிப்பு ஏற்படுகின்ற நேரம் என்பதால் அதனை சரி வர பயன்படுத்த குரு பகவானின் அருள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். மருத்துவ செலவுகள் குறையும்.

செவ்வாய் வீடான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு பூமி தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு நல்லவை நடைபெறப் போகின்றது. குறிப்பாக கட்டிடம் சம்மந்தமான தொழில், வியாபாரம் மற்றும் விவசாயம் செய்கின்றவர்களுக்கு அதிக அளவில் நன்மை ஏற்பட போகின்றது. சிலருக்கு மனை, வீடு வாங்குவது மற்றும் வீடு கட்டுவதற்கான போட்ட  திட்டங்கள்  படிப்படியாக நிறைவேறும்.

கல்வி:

மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறும் என்பதால் பல முறை படிக்க நேரிடும். உங்களது முயற்சியால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்க கொள்ள வாய்ப்பு இருப்பதால் பெற்றோர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.

குடும்ப வாழ்க்கை:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இல்லத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை புலப்படும். குடும்பத்தில் இதுவரை உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் மீண்டும் தங்களது தவறை உணர்ந்து உங்களுடன் இணைவார்கள். திருமணம் ஆன  தம்பதியருக்கு குழந்தை வரம் கிட்டும். சற்று வயதான விருச்சிகம் ராசியினர் ஆக  இருந்தால் தாத்தாவாகவோ, பாட்டியாகவோ ஆக  போகின்றார்கள். உடன் பிறந்தவர்களால் வீண்  பிரச்சனைகள் உண்டாகலாம். உங்களது மகனுக்கு அல்லது மகளும் நல்ல வருமானம் தரும் உத்யோகம் அமையக்கூடும்.

வேலை/தொழில்:

உத்யோகத்தில் இருக்கின்றவர்களுக்கு  பதவி உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரக்கூடும். அலுவலகத்தில் நேர், எதிர்மறை எதிர்ப்புகள் நீங்கும். இதுவரை உங்களின் முன்னேற்றத்திற்கு எதிராக இருந்தவர்களை இனம் கண்டு விலகிவிடுவீர்கள். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கின்றது. எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், இசை வல்லுநர்கள், கலைத்துறை, நாடக கலைஞர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோர்களுக்கு அற்புதமான காலமாக அமையப் போகின்றது.

வியாபாரிகள்:

கடந்த காலத்தை விட இப்பொழுது வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கும். டிரேடிங், கமிஷன், சேவை சார்ந்த தொழில் நல்ல முன்னேற்றம் அடையும். சுயதொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு கணிசமான லாபம் வரக்கூடும். புதிய வியாபார யுக்திகளைப் பயன்படுத்தி லாபத்தை பெருக்குவீர்கள்.

பரிகாரம்:

செவ்வாய் வீடான விருச்சிகம் ராசியில் பிறந்த நீங்கள் முருகனை தரிசித்து வாருங்கள், அதிகளவில் நன்மைகள் நடைபெறும்.

From around the web