விருச்சிகம் ஐப்பசி மாத இராசி பலன் 2020!
 

விருச்சிக ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

உயிரினங்கள் மீது மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். தான் சொல்வது தான் சரி என்று நினைத்து குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள். நான் தான் என்ற மம்மதையுடன் திகழ்ந்து அனைவர்களிடமும்  வெறுப்பை பெறுவீர்கள். எதிர்பாராத பயணங்கள் தேடி வரும்.

இந்த பயணம் உங்களுக்கு நல்ல அனுபவத்தையும், பாடத்தையும் கற்றுத் தரும். இந்த பயணம் சில புதிய நண்பர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தும். உடல்நிலை முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையுடன் இருப்பது நல்லது. ஏனெனில்  உடலில் சிறு சிறு உபாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இம்மாதத்தில் கல்வி உச்சத்தில் இருக்கும். தேர்விற்கு படித்துக் கொண்டிருப்பவர்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தாங்கள் நினைத்தவற்றை அடையலாம். கல்வியை உயிர்போல் நினைத்து மதிப்பு கொடுப்பீர்கள்.

அரசு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. இதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த பயிற்சி இவர்களுக்கு புது புது அறிமுகத்தை ஏற்படுத்தி தரும். இந்த அறிமுகத்தால் நமக்கு பல நன்மைகள் ஏற்பட நல்ல வாய்ப்பு இருக்கிறது.

அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளது. தனது மனசாட்சிக்கு உண்மையாக நடந்து அனைவரிடமும் பாராட்டைப் பெறுவீர்கள். சாதிக்க வேண்டும் என்கிற உயர் கொள்கையுடன் வெற்றிக்கு அடித்தளமிடுவீர்கள்.
 

From around the web