கன்னி நவம்பர் மாத இராசி பலன் 2020!
 

கன்னி ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். புதிய தொழில் ஒப்பந்தம் கூடி வரும். பண வரவு கூடும். 

வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எந்த ஒரு முடிவையும் திடீரென எடுக்காமல் நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். 

கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை உணர்வு ஏற்படும். உடன் பிறந்தவர்களால் நன்மை கிடைக்கும். வெளியூர் பயணங்கள் தடை படும். வாகன செலவு வரும். 

மாணவர்களின் மேற்படிப்பு பற்றிய யோசனை நல்ல முடிவுக்கு வரும். உணவு விஷத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். எதிரிகளால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

வீட்டில் மருத்துவ செலவு ஏற்படும். திருமண பேச்சு வார்த்தை தடைபடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.  இம்மாதத்தில் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் குரு பகவானையும் முருக பகவானையும் வழிபடுவது சிறப்பு தரும். 

உறவினர்களிடையே உங்கள் மீது உள்ள நம்பிக்கை குறையும். மின்சார பணிகளில் ஈடுபடும் போது கூடுதல் கவனம் செலுத்துங்கள். அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணி இட மாற்றம் நடைபெறும். உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், அப்படி இல்லை என்றால் அபாய கட்டத்திற்கு செல்ல நேரிடும்.

From around the web