துலாம் ஆவணி மாத ராசி பலன் 2018!

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் வளர்ச்சியான மாதமாக இருக்கும். துலாம் ராசியினருக்கு, இந்த ஆவணி மாதம் முழுவதும் சூரியன், புதன், சனி நற்பலன்களை கொடுப்பர். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அதன் பிறகு உங்கள் ராசியில் வருவதால் சிறப்பான பலன்களை காணலாம். பேச்சில் கவர்ச்சி உண்டாகும். இளமை, அழகு கூடும். உங்கள் செல்வாக்கு உயரும். துலாம் ராசியினருக்கு தடைகள் விலகி, இனிமேல் கஷ்டங்கள் எதுவும் நடைபெறாது என்றே கூறலாம். முக்கிய
 
Thulam aavani matha rasi palan 2018

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் வளர்ச்சியான மாதமாக இருக்கும். துலாம் ராசியினருக்கு, இந்த ஆவணி மாதம் முழுவதும் சூரியன், புதன், சனி நற்பலன்களை கொடுப்பர்.

ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அதன் பிறகு உங்கள் ராசியில் வருவதால் சிறப்பான பலன்களை காணலாம். பேச்சில் கவர்ச்சி உண்டாகும். இளமை, அழகு கூடும். உங்கள் செல்வாக்கு உயரும்.

துலாம் ராசியினருக்கு தடைகள் விலகி, இனிமேல் கஷ்டங்கள் எதுவும் நடைபெறாது என்றே கூறலாம். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் நிகழும். சூரியன் சாதகமாக இருப்பதால் தந்தை வழியால் ஆதாயம் உண்டாகும். தந்தை வழி தொழில் புரிகின்றவர்களுக்கு லாபம் வரக்கூடும். ஜென்மத்தில் இருக்கும் குரு சாதகமற்ற பலன்களை கொடுத்தாலும் அவரது விசேஷ பார்வையால் இல்லத்தில் சுப பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சகோதர, சகோதரி ஆதரவாக இருப்பார்கள். ஆகஸ்ட் 31-ம் தேதி சுக்கிரனால் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். நண்பர்கள், உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு பொருளாதாரம் வளம் மேம்படும்.

பணியிடத்தில் முன்னேற்றம் தொடர்ந்து கிடைக்கும். வேலைப்பளு குறையும். ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு வேலை, தொழில், வியாபாரம் சம்மந்தமாக வளர்ச்சி அடைவீர்கள். உங்களுக்கு வருகின்ற வாய்ப்புகளை தட்டிக் கழிக்காமல் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கொடுக்கின்ற பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். உங்கள் மேற்பார்வையில் அந்த காரியங்களை விரைவில் முடித்து விடுங்கள். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும்.

From around the web