கடகம் நவம்பர் மாத இராசி பலன் 2020!
 

கடக ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 
கடகம் நவம்பர் மாத இராசி பலன் 2020!

நீண்ட நாள் கனவு நிறைவேறும். அந்நிய நபர்களின் நட்பு கிடைக்கும்.  திருமண காரியம் விரைவில் கைகூடும்.பழைய வாகனம் மாற்றி புதிய வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு . 

வீடு மாற்றம் உருவாகும் சூழல்  ஏற்படும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் சரியாகும். குழந்தை பாக்யம் கிட்டும். 

உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டும் வகையில் வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். மன அழுத்தம் குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். 

வாகன வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடல் நலத்தில் சில‌ பிரச்சனை  ஏற்பட்டு பின்னர் சரியாகும். 

கொடுத்த கடன் வசூலாகும் புதிய உறவுகள் வந்து சேரும்.  தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. பண வரவு அதிகரிக்கும் வகையில் இந்த மாதம் சிறப்பாக உள்ளது. 

சனி கிழமைகளில் திருமாலை வழிபட்டு துளசி மாலை செலுத்தினால் எதிர் வரும் தொல்லைகள் அகலும்.  சிகப்பு மற்றும் நீல நிற உடைகளை அணிவது மிகுந்த பயனளிக்கும்.

பாதியில் நின்று போன வீட்டு கட்டும் பணி தடை இல்லமால் மீண்டும் நடை பெறும். உடன் பிறந்தவர்களால்  ஒரு சில‌ பிரச்சனை தோன்றி மறையும். கணவன் மனைவி இடையே எதிர் காலம் குறித்த திட்டமிடல் நன்மை தரும். 

From around the web