ரிஷபம் நவம்பர் மாத இராசி பலன் 2020!
 

ரிஷப ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

நாம் சொல்லும் வார்த்தைகளில் கவனம் தேவை. இல்லையென்றால் அந்த வார்த்தைகளால் உறவினர்களிடையே நீண்ட விரிசல் உண்டாகலாம். மன சங்கடத்திற்கு ஆளாகக் கூடும். நண்பர் தான் என்று நினைத்து குடும்பத்தில் நடக்கும் அனைத்தையும் எவரிடமும் கூறக் கூடாது. ஏனெனில் அதுவே உங்களுக்கு பெரிய வினையாக மாறக் கூடும்.

சமையல் செய்யும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. தீக்காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். கண்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஆடை, ஆபரணங்கள் வாங்க நேரிடும். வெளியில் பயணம் செல்லும் போது கொஞ்சம் கூடுதலாக பணம் எடுத்து செல்வது நல்லது. எதிர்பாராத செலவு செய்ய நேரிடும். 

திருமண வயதில் இருக்கும் இளைஞர், இளைஞிகளுக்கு திருமண உறவு கை கூடும். குடுபத்தினரை அனுசரித்து செல்வது மிகுந்த நன்மையை ஏற்படுத்தும்.

குடும்பத்தில் வீண் விவாதங்கள் நடைபெறலாம். இவற்றை சரிசெய்வதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபடுவீர்கள். கை மற்றும் கால்களில் வலி, வீக்கம் போன்ற தொந்தரவுகள் இருக்கக் கூடும். 

அதற்கு மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இல்லை. நாள் போக போக அதுவே குணமாகிவிடும். பெண்கள் முக அழகில் அதிக கவனம் எடுத்துக் கொள்வீர்கள்.
 

From around the web