சிம்மம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

இந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. பன்னிரண்டாம் இடத்தில் இருக்கின்ற ராகு பெயர்ச்சியாகி 11-ம் இடத்திற்கு வர போகின்றார். ஆறாம் இடத்தில் இருக்கின்ற கேது பெயர்ச்சியாகி ஐந்தாம் இடத்திற்கு வர போகின்றார். இனி ராகு-கேது பெயர்ச்சி என்ன பலன்கள் தர போகின்றது என்பதை விரிவாக காணலாம். பொதுவான பலன்கள்: பதினோராம் இடத்தில் ராகு இருக்கும் பொழுது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டால்
 
Simmam ragu kethu peyarchi 2019

இந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. பன்னிரண்டாம் இடத்தில் இருக்கின்ற ராகு பெயர்ச்சியாகி 11-ம் இடத்திற்கு வர போகின்றார். ஆறாம் இடத்தில்  இருக்கின்ற கேது பெயர்ச்சியாகி ஐந்தாம் இடத்திற்கு வர போகின்றார். இனி ராகு-கேது பெயர்ச்சி என்ன பலன்கள் தர போகின்றது என்பதை விரிவாக காணலாம்.

சிம்மம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

பொதுவான பலன்கள்:

பதினோராம் இடத்தில் ராகு இருக்கும் பொழுது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். கண்முடிக் கண் திறப்பதற்குள் எப்படி பணம் வந்தது என்றே தெரியாத அளவிற்கு தாராளமான தனலாபம் உண்டாகும். வேலை விஷயமாக அல்லது கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு கனவு நனவாகும். பொருளாதார சிக்கல்கள், கடன் தொல்லை, ஆரோக்கிய குறைவு, தொழில், வேலை அல்லது வியாபாரத்தில் பின்னடைவு போன்றவை எல்லாம் இந்த வருடம் இருக்காது என்றே கூறலாம். தாழ்வு மனப்பான்மை நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும்.

இதுவரை சுயமாக இருக்க முடியவில்லையே, மற்றவர்களை சார்ந்து வாழ்கின்றோமே என்று கவலைப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு, மாற்றம்  உண்டாகும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு கூடுதலான பொறுப்புகளும், வேலைச்சுமையும் இருக்கக்கூடும்.

அக்டோபர் மாதம் நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சிக்கு பிறகு சுப காரியத் தடைகள் விலகி நல்லவை நடைபெறக்கூடும். தடைபட்ட திருமணப் பேச்சு வார்தைகள் நல்ல படியாக முடிவடையும்.

ஐந்தாம் இடத்தில் இருக்கின்ற கேதுவால் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல நினைத்த புகழ் பெற்ற ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கேது சனியோடு இணைந்து தனுசு ராசியில் அதாவது ஐந்தாம் இடத்தில் இருப்பதால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. குரு அதிசாரம் பெற்று தனுசு ராசியில் சஞ்சரிக்கின்ற பொழுது இல்லத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படக்கூடும்.

வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் இருக்கின்றது. சரியான விலைக்கு மனை அல்லது வீடு விற்கும் முயற்சி நல்ல விதமாக முடிவடையும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

இந்த வருடம் வருகின்ற வாய்ப்புகளை தட்டி கழிக்காமல் சரியாக பயன்படுத்தி கொண்டால் சிம்மம் ராசியினருக்கு வெற்றி நிச்சியம்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணியிடத்தில் உங்களது திறமை பளிச்சிடும். செல்வாக்கு உயரும். பணியிடத்தில் இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள், எதிரிகள் தொல்லைகள் விலகும். உங்களை நம்பி முக்கியமான பொறுப்புகளும், பதவியும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, ஷேர், டிரேடிங்,ஆன்லைன் சம்மந்தமான வேலை அல்லது தொழில் செய்கின்றவர்கள் நல்ல வளர்ச்சி அடைவார்கள்.

வியாபாரம்/தொழில் பிரிவினர்கள்:

வியாபாரத்தில் இதுவரை இருந்த வந்த பின்னடைவு மறைந்து, சீராக வருமானம் வரக்கூடும். புதிய யுக்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள். பழைய பொருட்களை வாங்கி விற்பது, தரகு, இரும்பு, அச்சு தொடர்பான தொழில்கள் நல்லபடியாக நடைபெறக்கூடும்.

மாணவ – மாணவியர்கள்:

சிம்மம் ராசி மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும். இளம் வயதில் இருக்கும் சிம்மம் ராசியினருக்கு படிப்பில் கவனம் சிதறும் என்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை தங்கள் மேற்பார்வையில் வைத்து கொள்வது நல்லது.

குடும்பம்:

இல்லத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உற்றார், உறவினர்களின் விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சொந்த, பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். அவ்வப்பொழுது கடந்த காலத்தில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருப்பீர்கள். பழைய விஷயங்களை நினைப்பதும், பேசுவதையும் தவிர்த்து விட்டு, எதிர்காலத்தை பற்றி சிந்தியுங்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டு. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

உடல்நலம்:

உடல் நலம் சிறப்பாக இருக்கும். சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்:

கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் பிள்ளையாரை வழிபாடு செய்யுங்கள். சங்கடஹர சதுர்த்தி அன்று பிள்ளையாரை வழிபட்டு  வாருங்கள்.  மேலும் நல்ல வேலை, தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அடைய சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை வழிபட்டு  வாருங்கள்.

From around the web