விருச்சிகம் நவம்பர் மாத இராசி பலன் 2020!
 

விருச்சிக ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அத்துடன் அவர்களால் ஆதாயம் உண்டாகும். வெளி நாட்டு வியாபாரங்களில் லாபம் கிடைக்கும். 

வாழ்கை துணை உறவுகளால் ஆதரவு பெருகும். அலைச்சல் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு. தந்தை வழி சொத்துகளால் கருத்து வேறுபாடு  ஏற்பட்டு மறையும்.  இந்த மாதத்தில் செலவு அதிகரிக்கும். 

பணியாளர்களால் பிரச்சினை உண்டாகும். பெண்களுக்கு திருமண காரியம் விரைவில் கைகூடும். இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கி மனதில்  சுறுசுறுப்பும், தெளிவும் உண்டாகும். 

புதிய வேலை தேடுபவர்களுக்கு நினைத்த படி நல்ல வேலை கிடைக்கும். வெள்ளி கிழமை மற்றும் புதன் கிழமைகளில் அம்மனை வழிபட்டால் நல்லது நடைபெறும். வெளியூர் பயணங்கள் ஏற்படும்.  

குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு உள்ளது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உடல் நிலை சீராக இருக்காது. எனவே கவனமுடன் இருத்தல் நல்லது.  

பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டு வேலை மறுபடியும் தொடரும். மற்றவரின் விமர்சனத்தை கண்டு கொள்ளாமல் விலகி நிற்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 

நினைத்த காரியத்தை விரைவில் செய்து முடிப்பீர்கள். வீடு மாற்றம் ஏற்படலாம். 
 

From around the web