தனுசு நவம்பர் மாத இராசி பலன் 2020!
 

தனுசு ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

மறதிகள் அதிகமாக இருக்கும். சில வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் அந்த வேலைகளை முடிக்க நீண்ட நாட்கள் எடுத்து கொள்வீர்கள்.

குழந்தை இல்லாத தனுசு ராசி தம்பதியருக்கு இம்மாதத்தில் ஒரு நற்செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டீர்கள். மௌனத்துடனே இருப்பீர்கள். கடுமையான  வயிற்று வலியால் அவதிப்படுவீர்கள். 

குடும்பத்தில் நிதி நிலைமை சீராக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். இரண்டு மடங்காக லாபம் வந்து சேரும். இந்த லாபத்தின் சிறிதளவை அன்னதானத்திற்காக செலவழித்தால் குடும்பத்திற்கு நற்பலன்கள் கிடைக்கும்.  

குழந்தைகள் கல்வியில் மேலோங்கி இருப்பார்கள். வேலை இல்லாத தனுசு ராசி இளைஞர்களுக்கு நிறைய நிறுவனத்தில் வேலை காத்துக் கொண்டிருக்கும். உடனே அங்கு நேர்காணலுக்கு சென்றால் வேலை நிச்சயம் கிடைக்கும். அலைச்சல் அதிகமாகும். 

உங்களது பிள்ளைகள் கல்வி அல்லது வேலை தொடர்பாக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது. என்னதான் உறவினர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அதையெல்லாம் அவர்கள் நினைத்து பார்க்கமாட்டார்கள். உங்களிடம் ஒன்று கூறி, மற்றவர்களிடம் சென்று உங்களை பற்றி பொரணி பேசுவார்கள்.

அவர்களால் வீட்டில் கழகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடக்கமால் இருப்பது நல்லது.


 

From around the web