ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2018!

உங்கள் ராசிக்கு 8, 11-ம் வீட்டின் அதிபதியான குரு பகவான் பெயர்ச்சியாகி விருச்சகம் ராசிக்கு வர போகின்றார். இதுவரை குரு பகவான் ஆறாம் இடத்தில் இருக்கும் பொழுது பல வித இன்னல்கள், தாமதம் ஏற்பட்டு இருக்கும். இனி இந்த குரு பெயர்ச்சி உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு பல வித நன்மைகளை தர போகின்றார். பொது பலன்கள் : சுக்கிரன் ராசியான ரிஷபத்திற்கு குரு நன்மை தராது என்றாலும் அவரது ஏழாம் வீட்டின் பார்வை
 
Rishabam guru peyarchi palangal 2018 - 2019

உங்கள் ராசிக்கு 8, 11-ம் வீட்டின் அதிபதியான குரு பகவான் பெயர்ச்சியாகி விருச்சகம் ராசிக்கு வர போகின்றார். இதுவரை குரு பகவான் ஆறாம் இடத்தில் இருக்கும் பொழுது பல வித இன்னல்கள், தாமதம் ஏற்பட்டு இருக்கும். இனி இந்த குரு பெயர்ச்சி உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு பல வித நன்மைகளை தர போகின்றார்.

பொது பலன்கள் :

சுக்கிரன் ராசியான ரிஷபத்திற்கு குரு நன்மை தராது என்றாலும் அவரது ஏழாம் வீட்டின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் நன்மை தான் செய்வார். ஒரு வருடத்திற்கு அஷ்ட சனி தொடர்வதால், குருவின் பார்வை மூலம் உங்களுக்கு ஏற்படுகின்ற பதிப்புகளில் இருந்து தப்பித்து விடுவீர்கள். சிலருக்கு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அது வெளியில் தெரியாதபடி இருப்பீர்கள், அதுவும் குருவின் அருளால் தான்.

ரிஷபம் ராசியினருக்கு பல விதத்திலும் உயர்வு ஏற்படக்கூடும். தெளிவான பாதையை நோக்கி செல்வீர்கள்.பணம் கொடுக்கல் வாங்கலில் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதிக முதலீடு செய்வதை தவிர்த்திடுங்கள். மற்றவர்களின்  போலியான வாக்கு உறுதிகளை நம்பி உங்கள் பணத்தை இழந்து விடாதீர்கள். நீண்ட நாட்களாக சேமித்து வைத்து இருந்த பணம் கைநழுவி போக நேரிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். உடல்நிலை சீராகும். ஆனால் மார்ச் 2019 கேது சனியுடன் எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கம் நீங்கும். சிலர் வீடு கட்ட போட்டிருந்த திட்டம் நிறைவேறும். மனதில் தைரியம் கூடும். எப்பொழுதும் உங்களை புறம் பேசிக் கொண்டு இருப்பவர்கள் உங்களது முன்னேற்றத்தை கண்டு ஆச்சரியபடுவார்கள்.

கல்வி:

ரிஷப ராசி மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். வெளிநாடு சென்று கல்வி பயல நினைத்தவர்களுக்கு கனவு நனவாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். முழு கவனத்தை படிப்பில் செலுத்துங்கள்.

குடும்ப வாழ்க்கை:

கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். இதுவரை உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். இல்லத்தில் இருப்பவர்களிடம் இருந்து வந்த குழப்பான சூழ்நிலை அகலும்.

திருமண வயதில் இருக்கும் ரிஷப ராசியினருக்கு இந்த வருடம் திருமணம் முடிவடையும்.

வேலை/தொழில்:

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்தபடி ஊதிய உயர்வு ஏற்படக்கூடும். தொழில் செய்கின்றவர்களுக்கு லாபம் இரட்டிப்பாக வரக்கூடும். தொழில் இருந்த போட்டியாளர்கள் விலகி செல்வார்கள். பொருளாதாரம் உயரும்.

வியாபாரிகள்:

புதிதாக கிளைகள் அமைக்கின்ற திட்டங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரக்கூடும். அலங்கார பொருட்கள், ஆபரணங்கள், ஜவுளி, அழகு பொருட்கள் வியாபாரம் செய்கின்றவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

பரிகாரம்:

வியாழக்கிழமை அன்று அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்.

From around the web