ரிஷபம் ஐப்பசி மாத இராசி பலன் 2020!
 

ரிஷப ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். தாய், தந்தை மகன், மகன்களுக்கு இடையே உள்ள உறவு நீடிக்கும். ரிஷப ராசி காரர்களுக்கு இம்மாதத்தில் புதிதாக  நட்பு உறவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

திருமண வயதில் இருக்கும் ரிஷப ராசிக்கு காரர்களுக்கு திருமணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குருவின் பார்வை இம்மாதத்தில் இந்த ராசிக்காரர் மீது விழுவதால் வீட்டில் சுப காரியங்கள் ஏற்படலாம். கடன் தொல்லைகள் தீரும். ஏற்கனவே உள்ள அஷ்டம், சனி போன்றவை விலகும்.

தொழிலை பொறுத்தவரை எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. இருப்பினும் தொழில் விஷயத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. புதிதாக எந்த ஒரு புதிய தொழிலையும் ஆரம்பிக்க முதலீடு செய்வதை தவிர்க்கவும். சொத்து சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்படலாம். அப்படி ஏற்படும்போது சொத்து சம்பந்தமான ஆவணங்களில் கையெழுத்து இடுவதை தவிர்ப்பது நல்லது.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இம்மாதத்தில் உடல் நலத்தில் உள்ள தொந்தரவுகள் தீர்ந்து உடலில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். திடீர் பண வரவு ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை தேடும் ரிஷப ராசி இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புண்டு. குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றுவது பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும். 
 

From around the web