இன்றைய ராசி பலன் - 9 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 9, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்

வருமானம் குறைவாக இருக்கும், இதனால் வீட்டில் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் எழக்கூடும். மேலும் உடல் ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தொழில்ரீதியான நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நண்பர்களின் உதவியானது கிடைக்கப் பெறும். மனக் குழப்பங்கள் நிறைந்து காணப்படுவீர்கள்.

ரிஷபம்

உறவினர்கள் வருகையால் எதிர்பாராத செலவுகள் வரலாம். பூர்வீக சொத்துகள் குறித்த விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு ஏற்ற சிறந்தநாள். மேலும் வியாபாரத்தை விரிவுபடுத்துவோருக்கு மிகச் சிறந்த நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து பணம், பொருள் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.பண வரவுகள் இருக்கும், பழைய கடன் பாக்கிகள் வசூல் ஆகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.மேலும் வியாபாரத்தில் லாபத்தை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வருமானம் பெருகும். உறவினர்களால் நல்ல செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்

பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வியாபார ரீதியாக செல்லும் பயணம் நன்மையை தரும்.

கன்னி

வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். குல தெய்வ கோயிலுக்குச் செல்வது குறித்து யோசிப்பீர்கள்.

பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் தேடி வரும்.

துலாம்

குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.  கடன்கள் அடைபடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது.  வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு

கடன் பிரச்சினைகள் தீரும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். சேமிப்பு உயரும். பெண்களுக்கு வேலைபளு குறையும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் பலன்கள் கிடைக்கும். மனரீதியாகவும் உடல்ரீதியாவும் உற்சாகமாக இருப்பீர்கள்.

மீனம்

பயணங்களால் நன்மைகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு வீடு தேடி வரும். இன்றைய தினம் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சுபகாரியங்கள் கைகூடி வரும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

From around the web