இன்றைய ராசி பலன் - 9 அக்டோபர் 2020!

அக்டோபர் 9, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 

மேஷம்:
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் அன்பு பாராட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிட்டும். 

ரிஷபம்:
பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புண்டு, குழந்தைகளின் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.

மிதுனம்
கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். கடின உழைப்பின் மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். 

கடகம்
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும், நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

சிம்மம்
வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. வேலைரீதியாக அலுவலகங்களில் பாராட்டுகளும், உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். 

கன்னி
வீண் விவாதங்ளைத் தவிர்த்தல் நல்லது, குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும் தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். புதிய முயற்சிககளை தவிர்க்கவும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும். பேச்சில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும்.

துலாம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். வேலை தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றி பெரும். பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும்,  திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். 

விருச்சிகம்
பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். 

தனுசு
சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். எந்த செயலிலும் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பணம் சம்பந்தபட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். 

மகரம்
கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளின் உதவியுடன் எடுக்கும் முயற்சிகளால் வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். 

கும்பம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடன் சுமை குறையும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கும்பம் சந்திரன் உங்களுக்கு இன்று நன்மையை செய்வார்.  வீட்டில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். 

மீனம்
பொருளாதார நிலை உயரும். கணவன்- மனைவி இடையே சண்டைகள் வர வாய்ப்புண்டு. சுபமுயற்சிகளில் தடைகள் வரலாம் கவனம் தேவை. இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். புதிய முதலீடுகள் எதுவும் வேண்டாம் தவிர்க்கவும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

From around the web