இன்றைய ராசி பலன் - 8 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 8, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

பண ரீதியான பிரச்சினைகள் வீட்டில் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் அன்பு பாராட்டுவீர்கள், அவர்களின் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள், உயர் பதவி, லாபம் போன்றவற்றினை நீங்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

ரிஷபம்:

சுபசெய்திகள் துவக்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குழந்தைகள் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. குல தெய்வக் கோயில் குறித்து யோசனை செய்வீர்கள். மேலும் வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். பண ரீதியாக நெருக்கடியினை சந்திப்பீர்கள்.

மிதுனம்

அலுவலகத்தில் பொறுமையாக செயல்படுதல் வேண்டும், இல்லையேல் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் குழந்தைகளால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள், குழந்தைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கணிசமான லாபத்தை எதிர்பார்க்கலாம். கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்

சுப காரியங்கள் எதையும் துவக்காமல் இருத்தல் நல்லது, மேலும் எடுத்த காரியங்களில் தடை ஏற்படுவதாய் நினைத்து வருந்த வேண்டாம். விரைவில் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கும். மேலும் உடல் ஆரோக்கிய விஷயத்தில் முன்னேற்றத்தினைக் கண்டு மகிழ்ச்சி கொள்வீர்கள். கணவன்- மனைவி பிரச்சினைகள் சரியாகும்.

சிம்மம்

அலுவலகத்தில் உடன் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும். பண வரவு இருக்கும். இதனால் அதனை வீணாக செலவு செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டாம். பூர்விக சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். சேமிப்பு குறித்து பெரிய அளவில் கவனம் செலுத்துவீர்கள்.

கன்னி

குடும்பத்தில் பிரச்சினைகள் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, அதனால் அமைதி காப்பது சிறப்பானதாக இருக்கும். பிள்ளைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவதுடன் உங்களுக்கு நற்பெயர் பெற்றுக் கொடுப்பர்.  சுப காரியங்களில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகளும் சுமூகமாகும்.

துலாம்

புதிதாக வேலை தேடுவோருக்கான நாளாக இது இருக்கும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய பொருட்களை வாங்குவீர்கள். இந்த வாரம் முழுவதுமே உங்களுக்கு வேலைப்பளு கூடுதலாகவே இருக்கும். அதனால் சோர்வுடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம்

சுபகாரிய பேச்சுவார்த்தைகளைத் தள்ளிப் போடுதல் நல்லது. எந்தவொரு காரியம் குறித்தும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசிப்பது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவால் நீங்கள்  உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களுடன் சண்டை இடுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும் குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும்.

தனுசு

எந்த செயலிலும் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும்.

மகரம்

பண வரவால் பழைய கடன்களை அடைப்பீர்கள். மேலும் வெளியூர்ப் பயணங்களால் செல்வாக்கு அதிகரிக்கும், அதிக அலைச்சல் உள்ள நாளாக உள்ளதே என எண்ணி வருத்தம் கொள்ள வேண்டாம்.  பிறகே அனுகூலப் பலன் கிட்டும். இன்று உடல் நலம் சற்றும் சோர்ந்தும், பாதிக்கப்பட்டும் காணப்படுவீர்கள்.

கும்பம்

உடல் நிலையில் சிறப்பான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்களின் உதவிகள் கிட்டும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். வீண் செலவுகள் அதிகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

மீனம்

குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். கணவன்- மனைவி பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமாக இருப்பீர்கள், பிள்ளைகள் பெற்றோரிடம் நற்பெயர் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

From around the web