இன்றைய ராசி பலன் - 8 அக்டோபர் 2020!

அக்டோபர் 8, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 
 

மேஷம்
உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வருமானம் குறைவாக இருக்கும், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மேலும் உடல் ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தொழில்ரீதியான நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் சந்தோஷமான செய்திகள் தேடி வரும். 

ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உறவினர்கள் வருகையால் எதிர்பாராத செலவுகள் வரலாம். சொத்து பிரச்சனை தீரும். வேலை தேடுபவர்களுக்கு ஏற்ற சிறந்தநாள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

மிதுனம்
பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பண வரவுகள் இருக்கும், பழைய கடன் பாக்கிகள் வசூல் ஆகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.மேலும் வியாபாரத்தில் லாபத்தை சந்திப்பீர்கள். குழந்தைகள் மூலம் பெருமை தரும் விஷயங்கள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

கடகம்
கடன் பிரச்சனைகள் நிச்சயம் குறையும், சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்
பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கன்னி
பேச்சில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். புதிய முயற்சிககளை தவிர்க்கவும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். குல தெய்வ கோயிலுக்குச் செல்வது குறித்து யோசிப்பீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் தேடி வரும்.

துலாம்
உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.  அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்

விருச்சிகம்
வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் நிச்சயம் கிடைக்கும், தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து பணம், பொருள் உதவிகள் கிடைக்கும்.

தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். 

மகரம்
நிதானமாக யோசித்து முடிவு செய்வது நல்லது. உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. வியாபார ரீதியான பயணங்களால் பலன்கள் கிடைக்கும். மனரீதியாகவும் உடல்ரீதியாவும் உற்சாகமாக இருப்பீர்கள்.

கும்பம்
பெண்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கடன் பிரச்சினை தீரும். சேமிப்பு உயரும். பெண்களுக்கு வேலைபளு குறையும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

மீனம்
பணவரவு தாராளமாக இருக்கும். பயணங்களால் நன்மைகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு வீடு தேடி வரும். இன்றைய தினம் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும்.


 

From around the web