இன்றைய ராசி பலன் - 7 அக்டோபர் 2020!

அக்டோபர் 7, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 
 

மேஷம்:
உறவினர்கள் வருகையால் வீட்டில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு, வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். மேலும் வீட்டில் வீண் செலவுகள் ஏற்படும். உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மேலும் தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாதிருத்தல் நல்லது.

ரிஷபம்
உடன் பிறப்புகள் பண உதவி செய்வார்கள். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். தொழில் ரீதியாக கூட்டாளிகளுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மேலும் பூர்விக சொத்துகள் பல பிரச்சினைகளுக்குப் பின்னர் திரும்பக் கிடைக்கும். 

மிதுனம்
புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு ஏற்ற நாள், பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வெளியூர் பயணங்களால் பொருளாதார ரீதியான அனுகூலங்கள் ஏற்படும். வேலை விசயத்தில் கவனமாக இருங்கள் புதிய பொறுப்புகள் தேடி வரும். 

கடகம்
அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள், உங்களின் உடல் நலம் இன்றைக்கு நலமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வீட்டில் கணவன்- மனைவி பிரச்சினை அதிகமாக வாய்ப்புண்டு. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்.

சிம்மம்
நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். பணவரவு நன்றாக இருக்கும். மேலும் பெற்றோருடன் அன்பு பாராட்டுவீர்கள். 

கன்னி
சிக்கனமாக செலவு செய்வதால் கடன் பிரச்சினையை தவிர்க்கலாம். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்து போங்க வீண் விவாதம் வேண்டாம். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் வரலாம். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். 

துலாம்
பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். 

விருச்சிகம்
குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபகாரியங்கள் கைகூடும். முதலீடுகளால் லாபம் கிடைக்கும். 

தனுசு
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். வீட்டில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

மகரம்
கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்களின் உடல் ஆரோக்கியமும், பொருளாதார நிலையும் அற்புதமாக இருக்கும். 

கும்பம்
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.  வேலையில் கவனமும் பேச்சில் நிதானமும் தேவை,  பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மீனம்
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவும். 

From around the web