இன்றைய ராசி பலன் - 6 அக்டோபர் 2020!

அக்டோபர் 6, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

குடும்பத்தில் பொறுமையுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் சரியாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். கடன்கள் குறையும்.

ரிஷபம்

பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உடல் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அக்கறை காட்டுவது நல்லது.  பணவரவு தாரளமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.

மிதுனம்

உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும், மேலும் வேலை தேடுவோருக்கு மிகவும் சிறந்த நாளாக இருக்கும், குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும், பூர்வீக சொத்துக்கள் திரும்பக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

கடகம்

வீட்டில் பண நெருக்கடி உண்டாகும். இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் அக்கறை தேவை. கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படும், அதனால் பொறுப்பாக செயல்படுதல் வேண்டும்.

சிம்மம்

பொன், பொருள் வாங்குவதற்கான யோகம் இருக்கும். மேலும் தொழில்ரீதியாக புதிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையேயான பிரச்சினைகள் பெரிய அளவிலான பிரச்சினைகளாக வாய்ப்புண்டு,  நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கன்னி

குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். வெளியூர்ப் பயணங்கள் உடலில் பிரச்சினையினை ஏற்படுத்தும்,  உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கப் பெறும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.

துலாம்

குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் குறையும். தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பழைய கடன் பாக்கிகள் திரும்ப வந்து சேரும். . திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். வரவுக்கேற்ற செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வீட்டில் இருப்போரை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.

தனுசு

வியாபாரத்தில் பண வருமானம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பயணங்களால் வீண் அலைச்சல் அதிகரிக்கும் சுபகாரியங்கள் ரீதியாக எடுக்கும் முடிவுகள் சிறப்பான முடிவினைக் கொடுக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மகரம்

உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். உங்களின் உடல் நலம் அற்புதமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு இன்று தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும்.

கும்பம்

வியாபாரத்தில் நஷ்டத்தினை சந்திக்க வாய்ப்புண்டு, உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும், உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பெரியவர்களின் ஆசியினைப் பெறுவீர்கள். வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.  மேலும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இது இருக்கும். வெளியூர் பயணங்களால் லாபகரமான பலன்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

From around the web