இன்றைய ராசி பலன் - 4 அக்டோபர் 2020!

அக்டோபர் 4, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்

உடன் பிறந்தவர்களால் பண வரவுகள் இருக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பழைய பிரச்சினைகள் அனைத்தும் சரியாகி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்

திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சுப காரியங்கள் குறித்த பேச்சுகள் வீட்டில் எழுந்த வண்ணம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிட்டும்.

மிதுனம்

உங்களுக்கு பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும்.  கணவன்- மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் வரும்.

கடகம்

புதிதாக தொடங்கும் காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது.  பூர்விக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் அதிகரிக்கும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்

பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும், பண வரவு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் அதிகரிக்கும்.

கன்னி

குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். வேலை வாய்ப்பு குறித்த நற் செய்திகள் கிடைக்கப் பெறும்.  புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். அலுவலகத்தில் இருப்பவர்களுடன் பேசும்போது பேச்சில் கவனம் தேவை. தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையப் பெறும்.

துலாம்

மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளால் வீட்டில் பிரச்சினை ஏற்படலாம். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். எதிர்பாராத இடத்தில் இருந்து பண வருமானம் வரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரலாம்

விருச்சிகம்

இன்று பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சண்டை வர வாய்ப்புண்டு வீண் விவாதங்களை தவிர்க்கவும், அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் அதிகரிக்கும். உறவினர் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

தனுசு

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும், வெளியூர்ப் பயணங்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும், உறவினர்கள் வருகையால் வீட்டில் மனக் கசப்புகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே சண்டைகள் வர வாய்ப்புண்டு. வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். பண வரவு தாரளமாக இருக்கும். சுப முயற்சிகளைத் துவக்க ஏற்ற நாள். தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.

கும்பம்

வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியானது அதிகரிக்கும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உதவிகள் தேடி வரும்.

மீனம்

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களினால் உதவி கிடைக்கும். வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வருவதில் தடை ஏற்படலாம். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. முதலீடுகளை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும்.

From around the web