இன்றைய ராசி பலன் - 30 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 30, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

பண வருமானம் அதிகமாக வந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். தொழிலில் நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதனால் பேச்சில் கவனம் தேவை. எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். பயணங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்:

உடன் பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும்,  நண்பர்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். உங்க உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளியூர்ப் பயணங்கள் மகிழ்ச்சியினைக் கொடுக்கும்.  பூர்வீக சொத்துகளால் உங்களுக்கு பண வருமானம் கிடைக்கும்.

மிதுனம்:

திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். குழந்தைகள் உங்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்வர். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. வெளியூர்ப் பயணங்களில் நன்மைகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உறவினர்கள் வருகையால் வீட்டில் பிரச்சினைகள் எழலாம்.

கடகம்:

நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள் திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம்

உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.  பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி தேடி வரும். இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

வீட்டில் பிரச்சினைகள் குறையும். பொன், பொருள், மனை வாங்கும் சம்பவங்கள் நடக்கப் பெறும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும். புதிதாக எதிலும் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் வீண் செலவுகள் முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

துலாம்

வியாபாரத்தில் லாபம் அதிகமாகும், பிள்ளைகளின் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். கடன்கள் குறையும். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும்.

விருச்சிகம்

பணவரவு தாராளமாக இருக்கும். அதனால் வீண் செலவுகளை முடிந்த அளவு குறைத்தல் வேண்டும், பழைய கடன்கள் தீரும். செலவு இந்த வாரம் வீட்டில் மிகவும் அதிகமாகவே இருக்கும், உத்தியோகத்தில் வேலைபளு கூடும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும் ,மேலும் வியாபாரத்தினை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள், சுபகாரியங்கள் தொடங்குவதற்கு சிறந்த நாளாக இருக்கும். வீட்டில் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். வீட்டில் உள்ளோருடன் மனக் கசப்பு ஏற்படும்.

மகரம்

இன்றைக்கு தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம், உடல் ஆரோக்கியம் மற்ற நாட்களைவிட சிறப்பாகவே இருக்கும்.  எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பண வரவு சுமாராக இருக்கும், சுப காரியங்களுக்காக கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

கும்பம்

குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும், வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும். பூர்வீக சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை கிடைக்கும்.

மீனம்

உறவினர்களால் நன்மை நடைபெறும், புதிய வேலை வாய்ப்புகள் அமையப் பெறும். உங்களின் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். வீட்டில் மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்றைக்கு மகிழ்ச்சிகரமான நாள்.

From around the web