இன்றைய ராசி பலன் - 2 நவம்பர் 2020!
 

நவம்பர் 2, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 
 
இன்றைய ராசி பலன் - 2 நவம்பர் 2020!

மேஷம் 
பணவரவு சிறப்பான அளவில் இருக்கும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் அன்பு பராட்டுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருத்தல் வேண்டும், வெளியூர்ப் பயணங்களால் உடலளவில் சோர்ந்து காணப்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த பழைய பிரச்சினைகள் சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

ரிஷபம் 
எடுக்கும் அனைத்துவகையான முயற்சிகளில் வெற்றியானது கிடைக்கப் பெறும்.  வசதிகள் பெருகும் நாளாக அமையப்போகிறது. நீங்கள் எந்த செயலினையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபார ரீதியாக விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

மிதுனம் 
உடல் ஆரோக்கியம் ரீதியாக அதிக அளவு மருத்துவச் செலவு செய்வீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கப் பெறும். பண்டிகை காலம் என்பதால் செலவுகள் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். வியாபாரத்தில் லாபமானது நினைத்த அளவில் கிடைக்கும்.

கடகம் 
வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேற்பாடுகள் நீங்கும். சிக்கனத்தை கடைப்பிடித்து அதிக சேமிப்புகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் நடைபெறும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். 

சிம்மம் 
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் நஷ்டத்தை சந்திப்பீர்கள். இதனால் பண ரீதியான நெருக்கடிக்கு ஆளாவீர்கள். திருமண முயற்சிகளில் தடைகள் வரும், ஆனால் தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். பெண்கள் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மனதளவில் சோகத்துடன் இருப்பீர்கள். 

கன்னி 
குடும்பத்தில் உறவினர்களால் ஒற்றுமை சீர் குலையும். வேலைவாய்ப்பு ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். நண்பர்கள் பொருளாதார நிலைமையினை சீர்படுத்த நிச்சயம் உதவுவார்கள். தேவையற்ற செலவுகளால் கடன்கள் வாங்குவீர்கள், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

துலாம் 
வியாபாரத்தினை விரிவுபடுத்துவது குறித்த முடிவுகளைத் தள்ளிப்போடுதல் நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமையானது அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான  பேச்சுவார்த்தைகளில் முடிவடையும். உத்தியோகத்தில் சில பெரிய வாய்ப்புகள் நழுவிப் போகலாம். 

விருச்சிகம் 
இன்று காலை முதல் உற்சாகம் குறைந்து காணப்படுவீர்கள். உறவினர்களால் பண உதவிகள் கிடைக்கப் பெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவும் மகிழ்ச்சியை தரும். உங்களது புதிய முயற்சிக்கு குடும்பத்தினரின் ஆதரவானது கிடைக்கப் பெறும். பங்குச்சந்தை முதலீடுகளால் லாபம் வரும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

தனுசு
நிதி நிலைமை சிறப்பான அளவிலேயே இருக்கும், பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்க நல்ல நாள். மருத்துவ செலவுகள் அதிகம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவி கிடைக்கும். உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும்.

மகரம் 
பெற்றோரின் உடல் நலம் மேம்பட்டு இருக்கும், வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் மிகச் சிறந்த முன்னேற்றம் இருக்கும். கணவன்- மனைவி இடையே சண்டைகள் ஏற்பட வாய்ப்புண்டு. 

கும்பம் 
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு, அதனால் வார்த்தைகளில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண வரவு இருக்காது, பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண ரீதியாக இருந்த தடைகள் விலகும்.

மீனம் 
பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். தொழில்ரீதியான விஷயங்களிலும் அடுத்த கட்டத்தினை நோக்கிப் பயணிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள்,

From around the web