இன்றைய ராசி பலன் - 27 அக்டோபர் 2020!
 

அக்டோபர் 27, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 
 

மேஷம்:
குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படும். தொழிலில் நண்பர்களின் உதவி கிடைக்கும். வீட்டில் உள்ளோருடன் பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு பிரச்சினை முற்றலாம், வியாபாரத்தில் மந்த நிலை இருப்பதாக உணர்வீர்கள். எதிர்பாராத வீண் செலவுகளால் வருத்தமாக இருப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் அதிக அலைச்சலுக்கு ஆளாவீர்கள்.

ரிஷபம்:
நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உடன் பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும்,  குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பது குறித்த பேச்சு வார்த்தைகள் அதிகம் நடைபெறும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளியூர்ப் பயணங்கள் மகிழ்ச்சியினைக் கொடுக்கும்.  பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். 

மிதுனம்:
பூர்விக சொத்துகளால் வீண் அலைச்சல் ஏற்படும். வேலையைப் பொதுவாக உற்சாகத்துடன் செய்து முடிக்கவும் செய்வீர்கள். ஆடம்பர செலவுகளால் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வீண் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை. வேலையில் சக பணியாளர்களுடன் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு.

கடகம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்களை எதிர்பார்க்கலாம். வெளியூர் பயணம் செல்வீர்கள். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

சிம்மம்
பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் ஏற்படும்.. வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண ரீதியாக இருந்த தடைகள் விலகும்.

கன்னி
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பதாக உணர்வீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதில் பல விதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், குடும்பத்தில் வீண் செலவுகள் முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

துலாம்
புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும், பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். உடல் ஆரோக்கியம் ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள், இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

விருச்சிகம்
வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்குவீர்கள், பண்டிகை காலம் என்பதால் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள், சிலருக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக எப்போதும் இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். 

தனுசு
தொழில்ரீதியாக லாபம் கிடைக்கும், சுபகாரியங்களைத் துவக்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், வண்டி, வாகனங்கள் வாங்கப் பெறுவதற்கான அம்சங்கள் உண்டு. இன்று மன சஞ்சலம் ஏற்பட்டு காணப்படுவீர்கள். நண்பர்களுடனான பழைய பிரச்சினைகள் சரியாகும், உடல் ஆரோக்கியம் மோசமாக வாய்ப்புண்டு கவனமாக இருத்தல் நல்லது.

மகரம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவினர்கள் திடீரென வீட்டிற்கு வருகை தருவார்கள், பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  குல தெய்வ கோயிலுக்குச் சென்று வரவும். பண வரவு சுமாராக இருக்கும், வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும்.  கோயில் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புண்டு. 
உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. 

கும்பம்
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி தாண்டவமாடும். பிள்ளைகள் குடும்ப உறுப்பினர்களுடன் அன்பு பாராட்டுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும், வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும். 

மீனம்
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை, புதிய வேலை வாய்ப்புகள் அமையப் பெறும். வியாபாரம் ரீதியாக மிகச் சிறந்த முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியானது நிச்சயம் அதிகரிக்கும். பணவரவானது சுமாராகவே இருக்கும்.


 

From around the web