இன்றைய ராசி பலன் - 26 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 26, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். வீண் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியானது நிச்சயம் நிலவும்.

ரிஷபம்:

உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டும், குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும் கவனம் தேவை.

மிதுனம்

குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். வீட்டில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்

உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

சிம்மம்

உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். வேலை செய்யும் இடத்தில் வெற்றிகள் தேடி வரும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம் தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும்,  இன்று உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.

துலாம்

நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். பெண்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

விருச்சிகம்

உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். சிக்கனமாக செலவு செய்வதன் மூலம் பணப் பற்றாக்குறையை தவிர்க்கலாம்.

தனுசு

பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். நண்பர்களால் நன்மை ஏற்படும்.

மகரம்

நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகை கடன் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

கும்பம்

வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் எற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை நீங்கும்.  உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

மீனம்

வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு கடன் வாங்குவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும்.

From around the web