இன்றைய ராசி பலன் - 26 அக்டோபர் 2020!
 

அக்டோபர் 26, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 
 

மேஷம்
பண்டிகை என்பதால் வீட்டில் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், வியாபார விருத்தி செய்வது குறித்த சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள், வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மன மகிழ்ச்சிக்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மேலும் பூர்விக சொத்துகளைப் பெற கடுமையாகப் போராடுவீர்கள்.

ரிஷபம்
இன்று நீங்கள் மன சங்கடம் நிறைந்தவராக காணப்படுவீர்கள், அலுவலகத்தில் உள்ள அதிக அளவு வேலைப் பளுவால் மனம் நொந்து காணப்படுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

மிதுனம்
பண வரவு மிகச் சிறப்பாக இருக்கச் செய்யும். இன்றைய தினம் உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். குடும்பத்தில் அன்பானது அதிகரிக்கச் செய்யும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நினைத்த லாபம் கிடைக்கச் செய்யும்.  ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்
குடும்பத்தில் வெகு நாட்களாக இருந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள், பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்விக சொத்துக்களால் உடன் பிறந்தோர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். 

சிம்மம்
உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. குழந்தைகளால் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான பிரச்சினைகளை சமாதானத்தில் முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் ஏற்படும். 

கன்னி
வியாபாரம் ரீதியாக புதிய முடிவுகள் எதையும் எடுக்காமல் இருத்தல் நல்லது. சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் சரியாகும். 

துலாம்
கடன் கொடுக்கும்போது கூடுதல் கவனம் தேவை, யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம், உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உங்களின் கடன் பிரச்சினை தீரும். பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவியானது கிடைக்கப் பெறும். உங்களின் வங்கி சேமிப்பு உயரும். 

விருச்சிகம்
திருமணம் குறித்த பரிகாரங்கள் செய்ய கோயில் வழிபாடு செய்வீர்கள், கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணவரவு மகிழ்ச்சியினைத் தரும் வகையில் இருக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். 

தனுசு
பெற்றோர்களின் உடல் நலனில் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தனியார் துறையில் வேலை செய்யும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும்.  எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். 

மகரம்
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். உங்களின் உடல் ரீதியான பிரச்சினைகளால் வேலையில் ஆர்வம் குறையும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.  உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். 

கும்பம்
உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கடன் பிரச்சினை தீரும். சேமிப்பு உயரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். 

மீனம்
சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சலுக்குப் பின் வெற்றி கிடைக்கும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். நண்பர்களிடம் இருந்து பணம், பொருள் உதவிகள் கிடைக்கும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. 

From around the web