இன்றைய ராசி பலன் - 25 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 25, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் விலகி லாபம் கிட்டும். வேலை செய்யும் இடத்தில் உங்க திறமைகள் வெளிப்படும். தினம் வீண் செலவுகளும் அதிகரிக்கும் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும்.

மிதுனம்

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். தொழிலில் ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். நல்ல செய்திகள் தேடி வரும்.  ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.

கடகம்

உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு பல வழிகளில் வரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

சிம்மம்

பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம்.. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மன சங்கடங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகளால் நல்ல விஷயங்கள் நடக்கப் பெறும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன்கள் குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். திடீர் செலவுகள் வரலாம். சுப செலவுகளாக மாற்றிக்கொள்ளவும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.  வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

துலாம்

குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலதிகாரிகளுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபளு குறையும் பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் ஏற்படும்.

தனுசு

புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் எற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.  திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உருவாகும். கடன் பிரச்சினைகள் நீங்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பெற்றோருடன் இருந்த பிரச்சினை குறையும். உங்களின் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் பற்றி பேசுவீர்கள். வேலையில் நிதானமும் கவனமும் தேவை.

மீனம்

வீண் செலவுகள் உண்டாகலாம். நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடன் இருப்பீர்கள்.. எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. வருமானம் அதிகமாகும் வங்கி சேமிப்பு உயரும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். திருமண சுப பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

From around the web