இன்றைய ராசி பலன் - 25 அக்டோபர் 2020!
 

அக்டோபர் 25, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 
 

மேஷம்
வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்களை எதிர்பார்க்கலாம். வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் பெரும் மகிழ்ச்சியினைக் கொடுக்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார வரவால் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

ரிஷபம்
எதிர்பாராத திடீர் செலவுகளால் பொருளாதார நெருக்கடி இருப்பதாக உணர்வீர்கள். உடன் பிறந்தவர்களுடன் அன்பு பாராட்டுவீர்கள்.  வீண் பேச்சுக்களால் குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் வேண்டாம். பழைய கடன்களை அடைக்க முயல்வீர்கள்.

மிதுனம்
வியாபாரம் சம்பந்தமாக துவங்கும் புதிய முயற்சிகள் மிகச் சிறந்த முடிவுகளைக் கொடுக்கும். வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சுப செலவுகள் செய்வீர்கள்.  வேலையில் இருப்பவர்கள் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கடகம்
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உடன் பிறந்தவர்களுடன் இருந்த நீண்ட நாள் மனக் கசப்புகள் சரியாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துதல் வேண்டும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தினருடன் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

சிம்மம்
பிள்ளைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கி பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியினைக் கொடுப்பர். தேவையற்ற செலவுகளால் வீட்டில் பெரும் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கச் செய்யும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை ஏற்படும். பண்டிகைக்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

கன்னி
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்றைக்கு உங்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளுடன் வீட்டில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எந்த ஒரு முடிவையும் யோசித்து எடுத்தல் வேண்டும். 

துலாம்
நிதி நிலைமை பெரிய அளவில் சரிவினை நோக்கியதாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நிச்சயம் சரியாகும். துவக்கிய எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். 

விருச்சிகம்
அலுவலகத்திலும் சரி வீட்டிலேயும் சரி நிதானத்தைக் கடைபிடித்தல் வேண்டும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருக்கும். இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். சக ஊழியர்களுடன் அன்பு பாராட்டுவீர்கள்.

தனுசு
வீட்டில் சுபசெலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவானது கிடைக்கப் பெறும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் சற்று குறையும். 

மகரம்
வீண் வாக்குவாதங்கள் பெரும் பிரச்சினைகளில் முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவியுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் செய்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். குல தெய்வ கோயில்களுக்குச் சென்று குடும்பத்தோடு வழிபட்டு வருவீர்கள். 

கும்பம்
ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகள், ஊதிய உயர்வு, பதவி உயர்வுகளால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உறவினர்களால் மிகப் பெரும் உதவிகள் கிடைக்கப் பெறும்.  வெளியூர்ப் பயணங்கள் அலைச்சலைக் கொடுக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே பிரச்சினை தீரும். 

மீனம்
குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. வேலையில் இருந்த மந்த நிலை நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். 


 

From around the web