இன்றைய ராசி பலன் - 24 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 24, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

நண்பர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்:

உறவினர்கள் வருகையினால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். குழந்தைகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் ஏற்படும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.

மிதுனம்:

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். வெளியூர்ப் பயணங்களின்போது கவனம் அவசியம்.

கடகம்:

உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.

சிம்மம்:

கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். திடீர் பணவரவு உண்டாகும்.

கன்னி:

பண வரவு நன்றாக இருக்கும், விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் தேடி வரும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும்.  கணவன் மனைவி இடையே நெருக்கமும் பாசமும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும்.

துலாம்:

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். பெண்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம்:

பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு:

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். முயற்சி செய்தால் மட்டுமே எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்:

ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் லாபமும் கிடைக்கும். மனதிலும் உடலிலும் உற்சாகம் அதிகரிக்கும். இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் நீங்கும். கடன் பிரச்சனை தீரும்.

கும்பம்:

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நற்பலன்கள் ஏற்படும். புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம்:

உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். வீண் பேச்சுவார்த்தைகள் தவிர்ப்பது நல்லது.

From around the web