இன்றைய ராசி பலன் - 22 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 22, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

வியாபாரம் தொடர்பாக உற்சாகமாக இருப்பீர்கள். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. முதலீடுகள் லாபத்தை தரலாம். தொழிலில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்

உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.  நிதி நிலைமை சுமாராக இருக்கும்.  பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் பணவரவுகள் உண்டாகும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

மிதுனம்

வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்

கடகம்

உற்றார் உறவினர்களால் நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.  உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.

சிம்மம்

தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது. வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பது நல்லது.  நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

கன்னி

உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். உற்சாகம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலம் அதிகரிக்கும்.

துலாம்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் மன அமைதி ஏற்படும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

விருச்சிகம்

உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டும். பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும்.  வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. பிள்ளைகள் மூலம் சில தொல்லைகள் வரலாம் கவனமாக இருக்கவும். இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும்.

மகரம்

பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெலவுகள் உண்டாகும். வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே பேச்சில் கவனம் தேவை.

கும்பம்

குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மீனம்

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.  எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை. மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் இன்றைக்கு நடைபெறும். உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

From around the web