இன்றைய ராசி பலன் – 21 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 21 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்

தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.. எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். பயணங்களை தவிர்க்கவும். இன்றைய தினம் சுப முயற்சிகளை தவிர்ப்பது நல்லது., வீண் பேச்சை தவிர்க்கவும் மவுன விரதம் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

ரிஷபம்

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி நன்மைகள் நடக்கும். சுப காரியங்கள் நடப்பதற்கு அனுகூலமான நாள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வேலைபளு குறையும். உங்களுக்கு பணம் வரவு வரும்.

மிதுனம்

உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். குடும்பத்தில் சுபசெலவுகள் வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

கடகம்

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும், புதிதாக தொழில்வாய்ப்புகளில் கால் வைக்காதீர்கள். கடன் வாங்கல், கொடுக்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்களால் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

சிம்மம்

உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும், சுப செலவுகள் ஏற்படும், குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும், போட்டி பொறாமைகள் குறையும். கணவன்- மனைவி அன்பு அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

கன்னி

வீட்டிற்கு உறவினர்கள் வருவது மகிழ்ச்சியை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.  குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

உங்களுடைய குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உங்களுடைய பிள்ளைகளால் வீட்டில் பிரச்சினை ஏற்படலாம். உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.  பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர், திருமணம் சம்பந்தப்படட் காரியங்களை சற்று தள்ளிப் போடுதல் நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் வரலாம். குடும்பத்தில் சண்டை ஏற்படலாம், பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாடும். சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும்.

தனுசு

உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும், குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். குதூகலமாக இருப்பீர்கள். வெளியூர்ப் பயணம் செல்வோர் கூடுதல் கவனமாக இருத்தல் நல்லது, உடன்பிறந்தவர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு கூடும்.

மகரம்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.  குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.  செலவில் சிக்கனம் தேவை. மனதளவில் உற்சாகமாக உணர்வீர்கள். சொந்த பந்தங்களுடன் இணைந்து உற்சாகமாக இருப்பீர்கள்.

கும்பம்

உங்கள் உடல் நலனில் இருந்த பாதிப்புகள் விலகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் இன்றைக்கு உற்சாகமாக இருப்பீர்கள். சுப முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. பழைய கடன்கள் வசூலாகும்.

மீனம்

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உதவிகள் தேடி வரும். நண்பர்களினால் உதவி கிடைக்கும். வரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து குதூகலமாக இருப்பீர்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும்.

From around the web