இன்றைய ராசி பலன் – 20 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 20 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்

உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருப்பதாக உணர்வீர்கள், பிள்ளைகள் படிப்பில் சிறந்தவர்களாக விளங்குவர்,  வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி மிகுந்த அன்புடன் செயல்படுவர். புதியதாக தொழிலை அபிவிருத்தி செய்யும் எண்ணம் உங்களிடம் அதிகம் இருக்கும். அதனை நீங்கள் தயங்காமல் செயல்படுத்தலாம்.

ரிஷபம்

புதியதாக வேலை வாய்ப்புத் தேடுவோருக்கான நாள், மேலும் வேலையில் இருப்போர்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும்.  உடன்பிறந்தோர்களுடன் சண்டை ஏற்பட வாய்ப்புண்டு, அமைதியாக இருந்தால் பிரச்சினையினைத் தவிர்க்கலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சலுக்குப் பின் வெற்றி கிடைக்கும்

மிதுனம்

சுப காரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும், பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது,  வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கான பாராட்டினைப் பெறுவீர்கள். வீட்டில் தேவையில்லாத பொருட்கள் வாங்குவதால் பொருளாதார நெருக்கடி ஏற்படும்.

கடகம்

புதியதாக சொத்துக்கள், வீட்டு மனைகள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பணவரவு ஏகபோகமாக இருக்கும், வீணாகச் செலவு செய்துவிட வேண்டாம். குடும்பத்தில் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு, உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். உங்களுக்கு உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் வரலாம்.

சிம்மம்

பெற்றோரின் உடல் நிலையில் மிகச் சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம், கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் சமரசத்திற்கு வரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.

கன்னி

சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மனதில் அமைதி இல்லாமல் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும், பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.. குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.

துலாம்

உங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.  உங்களின் கடன் பிரச்சினை தீரும்.  வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.

விருச்சிகம்

தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

தனுசு

வீட்டில் குடும்பத்தினருடன் ஒற்றுமை அதிகரிக்கும். இன்று சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்குவீர்கள். சுப முயற்சிகளில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும்.

மகரம்

வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும் முன்னேற்றம் ஏற்படும் பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும் தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும்.

கும்பம்

கடன் பிரச்சினை தீரும். பணவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன உளைச்சல் நீங்கி நிம்மதி ஏற்படும். திருமண பேச்சுவார்த்தைகளில் நன்மைகள் நடைபெறும்.

மீனம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்க செய்ய நினைக்கும் செயல்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

From around the web