இன்றைய ராசி பலன் - 2 அக்டோபர் 2020!

அக்டோபர் 2, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும்.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்களும் முன்னேற்றமும் ஏற்படும்.

ரிஷபம்

பண வரவு நன்றாக இருக்கும்.  கடன் பிரச்சினைகள் குறையும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் வரலாம். தொழில் ரீதியாக புதிய முயற்சியினை செய்வீர்கள்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். பணவரவு இன்று சுமாராக இருக்கும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குழந்தைகளால் நன்மைகள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

கடகம்

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணம் செல்வதை தவிர்த்து விடுங்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும்.  குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை ஏற்படும்.

சிம்மம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் விரையங்கள் ஏற்படலாம். வருமானம் வரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். போட்டி பொறாமைகள் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். உங்களுடைய பிள்ளைகளால் வீட்டில் பிரச்சினை ஏற்படலாம்.

கன்னி

கடன் பிரச்சினை தீரும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணம் கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும்..  பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரும். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்க்கவும். உடல்நிலை சீராக இருக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்

துலாம்

உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் எளிதாக முடியும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் வரும்.  கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம்.

விருச்சிகம்

எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். நண்பர்களுடன் பேசுவதால் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களுடைய வேலையில் கவனம் தேவை. உங்களுடைய குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். இன்று உங்களுக்கு மன அமைதி குறையும் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளைத் துவக்குவதில் காலம் தாழ்த்துவது நல்லது, உங்களுக்கு திடீர் அலைச்சல், சோர்வு உண்டாகலாம்.  கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உறவினர்களால் நண்பர்களால் நன்மைகள் நடைபெறும்.

மகரம்

வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும்.  உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க பாதிப்புகள் சரியாகும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.  நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம்

மனக்குழப்பங்கள் ஏற்படும். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.  கடன் பிரச்சினைகள் தீரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் வரும். பழைய கடன்கள் வசூலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்

குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் குறையும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

From around the web