இன்றைய ராசி பலன் - 1 நவம்பர் 2020!
 

நவம்பர் 1, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 
 

மேஷம்:
குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகளால் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், குடும்பத்தில் மன நிம்மதி சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலையில் சக அலுவலர்களுடன் அன்பு பாராட்டுவீர்கள்.

ரிஷபம் 
புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். புதியதாகத் துவங்கும் காரியங்களில் வெற்றி வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கூடுதல் அன்பு பாராட்டுவீர்கள். திருமணம் சுப காரியங்கள் நடைபெற பேச்சுவார்த்தைகள் நடைபெறும். நல்ல செய்திகள் தேடி வரும் பண வரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும்.

மிதுனம் 
குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும், எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் மூலம் உதவி கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் பெரிதாக வாய்ப்புகள் உண்டு.

கடகம் 
உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், பேச்சில் கவனம் தேவை. மேலதிகாரிகளுடன் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உறவினர்கள் வருகையால் வீட்டில் சோகமான பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்கள் புதிய தொழிலைத் துவக்குவதில் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் நஷ்டத்தினை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

சிம்மம் 
குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்களை எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உங்களுடைய வீண் பேச்சுகளால் பிரச்சினைகள் தேடி வர வாய்ப்புகள் உண்டு. புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி 
உடல் நலப் பிரச்சினைகளால் மருத்துவ ரீதியான செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண முயற்சிகளில் உங்களை மகிழ்விக்கும் விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.  

துலாம் 
நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருப்பீர்கள், குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குப் பயணம் செய்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வேலை வாய்ப்புகளானது தேடி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேற்பாடுகள் ஏற்படும்.

விருச்சிகம் 
பணவரவு அதிகரிக்கும் இதனால் பழைய கடன்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது சிக்கனமாக செலவு செய்யவும். கணவன்- மனைவி இடையே உறவினர்களைப் பற்றிய பேச்சுகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதியதாக தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு 
வெளியூர்ப் பயணங்களால் உடல் அளவில் அலைச்சல் அதிகம் இருப்பதாக உணர்வீர்கள். பெண்கள் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நீண்டகாலமாக பிரிந்திருந்த தந்தைவழி உறவினர்களுடன் ஒன்று சேர்வீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணிச்சுமை அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். 

மகரம் 
குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும், பிள்ளைகள் சொல்படி கேட்டு நடப்பார்கள். பண வரவு சிறப்பாக இல்லாவிட்டாலும் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார நெருக்கடி எதுவும் இருக்காது. நிதானமாக அனைத்து முடிவுகளையும் யோசித்து எடுப்பீர்கள். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தள்ளிவைப்பது நல்லது.

கும்பம் 
வேலைவாய்ப்பு ரீதியாக உங்களை மகிழ்விக்கும் வகையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும், நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்து பொறுமையாக இருந்த விஷயங்களுக்கு சிறப்பான பலனைப் பெறுவீர்கள். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

மீனம் 
உங்களுக்கு பொருளாதார நிலை எதிர்பார்த்த அளவிலேயே இருக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மனைவி வழியில் உதவி கிடைக்கும். குடும்ப கவலைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். உடன்பிறப்புகள் வழியாக உங்களை மகிழ்விக்கும் விஷயங்கள் கிடைக்கப் பெறும்.
 

From around the web