இன்றைய ராசி பலன் - 16 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 16 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்

வருமானம் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் வேண்டும், பிள்ளைகள் உங்களுக்கு நற்பெயரினை வாங்கித் தருவார்கள். தொழில் வளர்ச்சி ரீதியாக எந்தவொரு செயலையும் துவக்காமல் இருத்தல் வேண்டும். திருமணம் குறித்த சுப காரியப் பேச்சுவார்த்தைகளை தள்ளிப் போடுதல் நல்லது.

ரிஷபம்

எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். பண வரவு அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். மனதிலும் உடல் ரீதியாகவும் உற்சாகம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.

மிதுனம்

சுபகாரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தனியார் துறையில் வேலை செய்யும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். 

கடகம்

வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சுப முயற்சிகளை தவிர்க்கவும். உறவினர்களால் நல்ல செய்திகள் தேடி வரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுடன் புதிய வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள்.

சிம்மம்

பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்பு ஏற்படும். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். புதிய முதலீடுகள் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். வீட்டில் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும். வீட்டில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.

துலாம்

உங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும் இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உங்களின் கடன் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உங்களின் வங்கி சேமிப்பு உயரும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும்பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். திடீர் செலவுகளால் வங்கி சேமிப்பு குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிப்பால் வங்கியில் சேமிப்பு உயரும்.

தனுசு

பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். சுப விரைய செலவுகள் ஏற்படும். வீட்டில் குடும்பத்தினருடன் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும் நண்பர்களால் நன்மை ஏற்படும். சுப முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.

மகரம்

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். உங்களின் உடல் ரீதியான பிரச்சினைகளால் வேலையில் ஆர்வம் குறையும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். முன்னேற்றம் ஏற்படும்.  வேலையில் உங்கள் உழைப்பிற்கேற்ப ஊதியம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடையே சுமூக உறவு ஏற்படும்.

கும்பம்

கணவன் மனைவி பேச்சில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும்.

மீனம்

இன்றைய தினம் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் தடையின்றி நடைபெறும். இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.  இன்றைய தினம் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

From around the web