இன்றைய ராசி பலன் - 15 அக்டோபர் 2020!

அக்டோபர் 15, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 

மேஷம்:
புதிய தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகமாகும். எதிர்கால சேமிப்பிற்காக அதிக அளவிலான தொகையினை செலவிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

ரிஷபம்:
வீண் கோபம் காரணமாக எதிர்பாராத பிரச்சினைகள் வரும். கவனம் தேவை. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் எற்படும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். 

மிதுனம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் அனுகூலங்கள் உண்டாகும்.  கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். பண ரீதியாக மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்கப் பெறும்.

கடகம்
குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் ஏற்படும். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். உடன் பிறந்தவர்களால் பெரிய அளவில் உதவிகள் கிடைக்கப் பெறும்.  வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம் .

சிம்மம்
உங்களுக்கு பணவரவு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். இதனால் வீண் செலவு செய்து பின்னர் வருத்தப்பட வேண்டாம்.  குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் வரலாம்.

கன்னி
பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் நிச்சயம் கிடைக்கப் பெறும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் இருந்த நீண்டகாலப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும். பண ரீதியாக உறவினர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும். 

துலாம்
குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பெரிய அளவில் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தினை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். 

விருச்சிகம்
குடும்பத்தில் திடீர் செலவுகள் வரும் வங்கி சேமிப்பு குறையும். புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள் குறையும். கணவன் மனைவி இடையே சில பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உள்ளது.

தனுசு
நீங்கள் மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் வியாபாரம் லாபத்தை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பணம் சம்பந்தபட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.  

மகரம்
கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.  வியாபாரத்தில் நஷ்டத்தினை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கடன் பிரச்சினைகள் நீங்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே அனுகூலப் பலன் கிட்டும். இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். 

கும்பம்
பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டில் உடன் பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். 

மீனம்
வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். கணவன்- மனைவி இடையே சண்டைகள் வர வாய்ப்புண்டு. பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.  மனதில் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும்  இருப்பீர்கள். கடன் பிரச்சினைகள் நிச்சயம் தீரும். பூர்வீக சொத்துகள் ரீதியாக அலைந்து சோர்ந்து போவீர்கள். 


 

From around the web