இன்றைய ராசி பலன் - 15 அக்டோபர் 2020!

அக்டோபர் 15, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 

மேஷம் 
பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். வேலையில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். வேலையில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்தி தேடி வரும். கடன் பிரச்சினைகள் தீரும்.

ரிஷபம் 
குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமை அதிகரிக்கும்.  கணவன் மனைவி நெருக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். 

மிதுனம் 
செய்யும் செயல்களில் தடைகள் ஏற்பட்டு மனதினை சங்கடப்படுத்தலாம், பணவரவு இன்று சுமாராக இருக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளதால் கவனமாக இருத்தல் நல்லது. வீட்டில் தேவையில்லாத மருத்துவ செலவுகளால் குடும்ப உறுப்பினர்களுடன் மனக் கசப்பு ஏற்படும், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

கடகம் 
நினைத்த காரியத்தினை நிச்சயம் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள், பள்ளிக் கால நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அமையப் பெறும். உங்களுடைய நீண்ட கால ஆசைகள் நிச்சயம் நிறுவேறும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்

சிம்மம் 
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அரசு வழியில் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். உங்களுடைய பிள்ளைகளால் வீட்டில் பிரச்சினை ஏற்படலாம். 

கன்னி 
பூர்வீக சொத்துக்கள் அலைச்சலுக்குப் பின்னர் வெற்றியினைக் கொடுத்து மகிழ்ச்சியினை ஏற்படுத்தும், குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். பணம் கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும்..  நண்பர்களால் உதவிகள் வீடு தேடி வரும்.

துலாம் 
வெளியூர் பயணம் செல்வதை தவிர்த்து விடுங்கள். தொழில் வியாபாரத்தில் வரவை காட்டிலும் திடீர் செலவுகள் வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் பாராட்டுகள் கிடைக்கப் பெறும். சுப காரிய பேச்சுவார்த்தைகளை தள்ளிப்போடுதல் இப்போதைக்கு நல்லது.  உடன் பிறந்தவர்களுடன் பிரச்சினைகள் வாய்ப்புண்டு.

விருச்சிகம் 
பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சிறப்பான பொருளாதார நிலையால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள். பழைய கடன் பாக்கிகளைத் திரும்ப செலுத்தி மகிழ்வீர்கள்.

தனுசு 
பணவரவினால் ஆடம்பரப் பொருட்களை வாங்கி வீண் செலவுகளைச் செய்ய வேண்டாம். எதிர்கால சேமிப்பில் கவனம் செலுத்துதல் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுப முயற்சிகளைத் துவக்குவதில் காலம் தாழ்த்துவது நல்லது, கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

மகரம் 
உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் சுப செலவுகள் அதிகரிக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.  வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் வரும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி பிரச்சினை தீரும். கடன் பிரச்சினையில் இருந்து மீள்வீர்கள்.

கும்பம் 
பயணங்களை தவிர்த்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். வேலை விஷயமாக உயர் பதவிகள், பாராட்டுகளால் மிகவும் உற்சாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர். கடன் வாங்குவதைக் குறைக்க முடிவு எடுப்பீர்கள். மேலும் பொன், பொருள் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மீனம் 
பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் நடக்கப் பெறும், சுப காரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியில் முடியும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் குறையும். உங்களை வருத்தப்படுத்திய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். 


 

From around the web