இன்றைய ராசி பலன் - 14 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 14 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பணவரவு ஒரு பக்கம் வந்தாலும் குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் மன நிம்மதி சற்று குறையும். வேலையில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்ப்புகள் விலகி லாபம் கிட்டும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

ரிஷபம்

உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு இருப்பீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள்.

மிதுனம்

எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.  உங்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வேலையில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

கடகம்

சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் அடைபடும் அளவிற்கு பணம் வரும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்றைக்கு குடும்பத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்.

சிம்மம்

குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். மன அமைதி இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

கன்னி

உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வரலாம். யோசித்து முடிவு செய்யுங்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவி வழி உறவினர்களால் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.

துலாம்

குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  வேலை செய்யும் இடத்தில் பொறுப்போடு நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபளு குறையும்.

விருச்சிகம்

சொந்த பந்தங்களினால் நன்மைகள் நடக்கும். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.  வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவும் மகிழ்ச்சியை தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும்.  பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.

தனுசு

அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குழந்தைகள் கல்வியில் மேம்பட்டு இருப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.. புத்துணர்வாக செயல்படுவீர்கள். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். கடன் பாக்கிகள் வந்து சேரும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும்.

மகரம்

உறவினர்களால் அனுகூலம் கிட்டும், தொழில்ரீதியாக பதவி உயர்வு தேடி வரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.. சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு, திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.. பண வரவு இருக்காது, இதனால் பொருளாதார நெருக்கடியினை சந்திப்பீர்கள். தொழில்ரீதியான விஷயங்களில் மேலதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண நெருக்கடிகள் ஓரளவு விலகும்.

மீனம்

வீண் செலவுகள் உண்டாகலாம். சுபகாரியங்களை துவக்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி சண்டைகள் முடிவுக்கு வரும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

From around the web