இன்றைய ராசி பலன் - 14 அக்டோபர் 2020!

அக்டோபர் 14, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 

மேஷம்:
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் பிரச்சினை தரும் சம்பவங்கள் நடக்கப் பெறும். கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத மகிழ்ச்சி தரும் சம்பவங்களை எதிர்பார்க்கலாம்.

ரிஷபம் 
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் சுபசெய்திகள் தேடி வரும்.. வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும் 

மிதுனம் 
கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும், இல்லையேல் மிகப் பெரும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.

கடகம் 
எடுத்த காரியத்தை துணிவோடு செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். 

சிம்மம் 
உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். அலுவலகத்தில் மன சங்கடங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். 

கன்னி 
பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் நல்ல விஷயங்கள் நடக்கப் பெறும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.  வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். 

துலாம் 
குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். 

விருச்சிகம் 
பொருளாதாரம் பெரிய அளவில் சிறப்பாக இருக்கும்.  உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

தனுசு 
குடும்பத்தில் எதிர்பாராத வகையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் எற்படும். கடன் பிரச்சினைகள் நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம் 
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆடம்பர செலவுகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.  வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். கடன் பிரச்சினைகள் நீங்கும். 

கும்பம் 
வீண் செலவுகளால் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியினை சந்திப்பீர்கள். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். முடிந்த அளவு சிக்கனத்துடன் இருத்தல் நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் பற்றி பேசுவீர்கள். 

மீனம் 
உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடன் இருப்பீர்கள்.. உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். திருமண சுப பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும்.


 

From around the web