இன்றைய ராசி பலன் – 13 அக்டோபர் 2020!

அக்டோபர் 13 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 

மேஷம் 
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.. எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். தொழிலில் மிகச் சிறந்த லாபத்தை அடைவீர்கள். பயணங்களை தவிர்க்கவும். இன்றைய தினம் சுப முயற்சிகளை தவிர்ப்பது நல்லது., ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

ரிஷபம் 
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் சுபசெய்திகள் தேடி வரும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வேலைபளு குறையும். 

மிதுனம் 
உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். குடும்பத்தில் சுபசெலவுகள் வரும். வியாபாரத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். 

கடகம் 
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும், புதிதாக தொழில்வாய்ப்புகளில் கால் வைக்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். 

சிம்மம் 
உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும், சுப செலவுகள் ஏற்படும், குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். கணவன்- மனைவி அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். 
கன்னி 
வீட்டிற்கு உறவினர்கள் வருவது மகிழ்ச்சியை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.  குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

துலாம் 
உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உங்களுடைய பிள்ளைகளால் வீட்டில் பிரச்சினை ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர், உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம் 
தொழில் ரீதியாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் வரலாம். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும், பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாடும்குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். 

தனுசு 
உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும், குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியூர்ப் பயணம் செல்வோர் கூடுதல் கவனமாக இருத்தல் நல்லது, பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

மகரம் 
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.  குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.  செலவில் சிக்கனம் தேவை. மனதளவில் உற்சாகமாக உணர்வீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடைபெறும்.

கும்பம் 
உங்கள் உடல் நலனில் இருந்த பாதிப்புகள் விலகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் இன்றைக்கு உற்சாகமாக இருப்பீர்கள். சுப முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. பழைய கடன்கள் வசூலாகும். 

மீனம் 
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்களினால் உதவி கிடைக்கும். வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து குதூகலமாக இருப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்க நல்ல அனுகூலமான நாளாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். 


 

From around the web