இன்றைய ராசி பலன் - 12 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 12 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

உறவினர்கள் வருகையால் வீட்டில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு, மேலும் வீட்டில் வீண் செலவுகள் ஏற்படும். மேலும் தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாதிருத்தல் நல்லது, மேலும் நண்பர்களுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டு பிரச்சினைகள் ஏற்படலாம்.

ரிஷபம்

உடன் பிறப்புகள் பண உதவி செய்வார்கள். தொழில் ரீதியாக கூட்டாளிகளுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் பூர்விக சொத்துகள் பல பிரச்சினைகளுக்குப் பின்னர் திரும்பக் கிடைக்கும். மேலும் கூட்டாளிகளுடன் கருத்து வேற்பாடுகள் ஏற்படும்போது முடிந்த அளவு பொறுமையாக செயல்படுங்கள்.

மிதுனம்

புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு ஏற்ற நாள், மேலும் தொழில் ரீதியாக விருத்தி குறித்து சிறப்பான முடிவினை எடுப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வெளியூர் பயணங்களால் பொருளாதார ரீதியான அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் செலவுகளைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

கடகம்

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள், உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வீட்டில் கணவன்- மனைவி பிரச்சினை அதிகமாக வாய்ப்புண்டு. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும்.

சிம்மம்

நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். பணவரவு நன்றாக இருக்கும். மேலும் பெற்றோருடன் அன்பு பாராட்டுவீர்கள்.

கன்னி

சிக்கனமாக செலவு செய்வதால் கடன் பிரச்சினையை தவிர்க்கலாம். இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் வரலாம். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்

பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.

விருச்சிகம்

குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபகாரியங்கள் கைகூடும். முதலீடுகளால் லாபம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

தனுசு

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

மகரம்

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல செய்திகள் தேடி வரும். இன்று குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது உத்தமம்.  பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

கும்பம்

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.  தேவைகள் யாவும் நிறைவேறும். இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மீனம்

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவும்.

From around the web