இன்றைய ராசி பலன் – 12 அக்டோபர் 2020!

அக்டோபர் 12 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 

மேஷம்
உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருப்பதாக உணர்வீர்கள், உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் சிறந்தவர்களாக விளங்குவர்,  பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். ரிஷபம்
வெளியூர் பயணம் செல்ல நேரிடும், மேலும் வேலையில் இருப்போர்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும்.  குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும், அமைதியாக இருந்தால் பிரச்சினையினைத் தவிர்க்கலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

மிதுனம்
கணவன் மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கச் செய்யும், கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது,  பணவரவு அதிக அளவில் இருக்கும்.வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கான பாராட்டினைப் பெறுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் 

கடகம்
தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்காது, குடும்பத்தில் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு, உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். உங்களுக்கு உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் வரலாம். 

சிம்மம்
உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் சமரசத்திற்கு வரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

கன்னி
பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும், திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். 

துலாம்
பணவரவு சிறப்பாக இருக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.  புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் 

விருச்சிகம்
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். 

தனுசு
எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். இன்று சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மனதில் நினைத்த காரியம் இன்று நிறைவேறும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்குவீர்கள். 

மகரம்
தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் மகிழ்ச்சியானது நிச்சயம் ஏற்படும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். 

கும்பம்
உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் நன்மைகள் நடைபெறும்.

மீனம்
உடன்பிறந்தவர்களுடன் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்களால் நன்மை அதிகரிக்கும். 


 

From around the web