இன்றைய ராசி பலன் - 11 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 11, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்

சுபகாரிய நிகழ்வுகளைத் தள்ளிப் போடுதல் வேண்டும். மேலும் பிள்ளைகள் வீட்டில் மிகவும் அன்புடன் நடந்து கொள்வர்.  தொழில் ரீதியாகப் புதிய முடிவுகள் எதையும் எடுக்காதிருத்தல் நல்லது. பொருளாதார நெருக்கடி சரியாக பண வரவுகள் வீட்டில் இருக்கும். வியாபாரத்தில் மற்றவர்களுடன் அன்பு பாராட்டுவீர்கள்.

ரிஷபம்

உடன் பிறந்தவர்களால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். மேலும் நிதி நிலைமை மிகவும் சுமாரான நிலையிலேயே இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய தேவையானது இருக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் குறித்து முடிவுகளை எடுப்பீர்கள்.

மிதுனம்

வேலையில் மற்றவர்களிடம் நட்பு பாராட்டுவீர்கள், மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் அலுவலகங்களில் நடக்கப் பெறும். மேலும் வீட்டில் ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் சரியாகி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நல விஷயத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வீட்டில் வீண் செலவுகள் செய்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும்.

கடகம்

குடும்பத்தில் உறவினர்களால் பிரச்சினைகள் உருவாகும். இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்கள் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆடம்பர செலவுகளால் பணப்பிரச்சினை உண்டாகலாம். பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களது அன்பை பெற முடியும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். தேவையற்ற செலவுகளால் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

உறவினர்கள் மூலம் பணரீதியான உதவிகள் கிடைக்கப் பெறும், பெற்றோரின் உடல் நலனில் மிகச் சிறந்த முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து நற்பெயர் பெற்றுக் கொடுப்பார்கள். எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாகவும் இந்நாள் இருக்கப் பெறும்.

துலாம்

பிள்ளைகள் படிப்பில் மிகப் பெரிய அளவில் சிறந்து விளங்குவர், நீங்கள் செய்யும் செயலில் தடுமாற்றம் இருப்பதாய் உணர்வீர்கள். மேலும் மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள், வாழ்க்கைத் துணையின் ஆதரவு மற்றும் அன்பு அதிகமாக இருக்கும், பணவரவு அதிகரிக்கும். அலுவலகத்திலோ வீட்டிலோ பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

விருச்சிகம்

புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம்.  இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.  உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் சற்று குறையும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். இன்று இல்லத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

மகரம்

இன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கலாம். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

கும்பம்

உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே பிரச்சினை தீரும்.

மீனம்

தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும், அதனால் வேலைவாய்ப்பு ரீதியாக புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்தொழில் ரீதியான பயணங்களால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

From around the web