இன்றைய ராசி பலன் - 10 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 10, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் சரியாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் குதூகலமாக இருப்பீர்கள். சிந்தித்து செயல்பட்டால் தொழில் விருத்திக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை அளிக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

ரிஷபம்

உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உடல் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அக்கறை காட்டுவது நல்லது.  சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

மிதுனம்

குழந்தைகளால் வீட்டில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு, மேலும் வேலை தேடுவோருக்கு மிகவும் சிறந்த நாளாக இருக்கும், பிரச்சினைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்கள் திரும்பக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.

கடகம்

பணம் கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் அக்கறை தேவை. தேவையிலாத பொருட்கள் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளவும்.

சிம்மம்

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் நற்பெயரைப் பெறுவீர்கள்,  தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையேயான பிரச்சினைகள் பெரிய அளவிலான பிரச்சினைகளாக வாய்ப்புண்டு,  பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.. குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். வீட்டில் விரைய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்,

கன்னி

அலுவலகத்தில் உள்ளோருடன் அனுசரித்துச் செல்லவில்லையெனில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். வெளியூர்ப் பயணங்கள் உடலில் பிரச்சினையினை ஏற்படுத்தும்,  அலைச்சலும் உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்

துலாம்

வேலையில் உயர் பதவிகள், ஊதிய உயர்வுகள், பாராட்டுகள் என அனைத்தும் கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும். பழைய கடன் பாக்கிகள் திரும்ப வந்து சேரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வரவுக்கேற்ற செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். இன்று திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டில் குடும்பத்தினருடன் பேசும் போது கவனமாக பேசுங்கள்.

தனுசு

வியாபாரத்தில் பண வருமானம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் அதிகரிக்கும் இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

மகரம்

பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உங்களின் உடல் நலம் அற்புதமாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு இன்று தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

கும்பம்

வியாபாரத்தில் நஷ்டத்தினை சந்திக்க வாய்ப்புண்டு, குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும், பெரியவர்களின் ஆசியினைப் பெறுவீர்கள். குடும்பத்தில் வரவு- செலவு குறித்த கணக்கினைக் கட்டுக்குள் வைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் ரீதியான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

சுபகாரிய விஷயங்கள் வீட்டில் நடைபெறும். மேலும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இது இருக்கும். நண்பர்களால் பண ரீதியான உதவிகள் கிடைக்கப் பெறும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

From around the web