இன்றைய ராசி பலன் - 10 அக்டோபர் 2020!

அக்டோபர் 10, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
 

மேஷம் 
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். பேச்சில் சாதுர்யம் அதிகரிக்கும் மதிப்பு மரியாதை கூடும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

ரிஷபம் 
உறவினர்கள் மூலம் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பாராத வழியில் வருமானங்கள் வரும். எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.  உறவினர்களிடையே வாக்குவாதம் எதுவும் செய்ய வேண்டாம்.

மிதுனம் 
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கடன் பிரச்சினை நீங்கும், இன்று உங்கள் பொருளாதார நிலையும், ஆரோக்கியமும் மந்தமாகவே இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தவும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

கடகம் 
வங்கி கடன் கிடைக்கும். மன நலமும் ஆரோக்கியமாக இருக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில்ரீதியாக லாபம் வரும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. முதலீடுகளில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. பேச்சில் கவனம் தேவை.

சிம்மம் 
எந்தவொரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது, உங்களுக்கு மனதில் அமைதி பிறக்கும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடன் வாங்க வேண்டாம். வீண் பேச்சுக்கள் வாக்குவாதங்கள் வேண்டாம்.  உங்களுடைய பிள்ளைகளால் வீட்டில் பிரச்சினை ஏற்படலாம். 

கன்னி 
குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். மன அமைதியான நாளாக அமையும். வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன்கள் குறையும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

துலாம் 
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். 

விருச்சிகம் 
உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வீட்டில் உற்சாகமாக நேரத்தை செலவு செய்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பண வருமானம் வரும். சுப செலவுகள் அதிகரிக்கும். உங்களுடைய குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம். 

தனுசு 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் விவாதங்கள் வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

மகரம் 
பண வருமானம் வரும், வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க பாதிப்புகள் சரியாகும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம் 
உடல் ஆரோக்கியம் தேவை, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கையில் உற்சாகமான நாளாக அமையும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். திடீர் செலவுகள் வரும் பணத்தை பத்திரப்படுத்தவும்.

மீனம் 
ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும், நண்பர்களினால் உதவி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மன நிம்மதியாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும், வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுக்கு பணம் வரவு வரும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். 


 

From around the web