மீனம் நவம்பர் மாத இராசி பலன் 2020!
 

மீன ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

குடும்பத்தில் உள்ளவர்களால் பிரச்சனை உருவாகும். அத்துடன் அலைச்சல் இருக்கும். வேலையில் பணி சுமை அதிகரிக்கும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. 

பண புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள் உருவாகி மறையும். 

அரசு பணியில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். 

பதவி உயர்வு குறித்து பரிசீலிக்க படுவீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருக்கவும். புதிய முயற்சி மேற்கொள்ளும் போது உடன் இருப்பவர்களிடம் ஆலோசனை செய்வது நல்லது. 

பங்குதாரர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். புதிய வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உள்ளது. திருமண காரியம் நிகழும். சிலருக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பு வரும். 

உங்களுடைய கவன குறைவினால் பிரச்சனை உருவாகும் அதனால் சற்று கவனமுடன் இருத்தல் அவசியம். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். 

தனவரவு அதிகரிக்கும். ஏழைகளுக்கு தானம் வழங்கினால் நன்மை உண்டாகும். சனி கிழமைகளில் குரு பகவானையும் தன்வந்திரியையும் வழிபட்டால் மன கவலைகள் மறையும். 

ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். 
 

From around the web