மிதுனம் ஆவணி மாத ராசி பலன் 2018!

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும் மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிநாதன் புதன் வலு குறைந்து இருந்தாலும், குரு பார்வை உங்கள் ராசிக்கு இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். சுக்கிரனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த ஆவணி மாதத்தில் குரு, சூரியன் சாதகமாக இருப்பதால் நற்பலன்களை கொடுப்பர். இல்லத்தில் சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். தந்தை வழி உறவினர்களால் சண்டை உருவாகலாம். தந்தை உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள்.
 
Mithunam aavani matha rasi palan 2018

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும் மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிநாதன் புதன் வலு குறைந்து இருந்தாலும், குரு பார்வை உங்கள் ராசிக்கு இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும்.

சுக்கிரனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த ஆவணி மாதத்தில் குரு, சூரியன் சாதகமாக இருப்பதால் நற்பலன்களை கொடுப்பர். இல்லத்தில் சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும்.

தந்தை வழி உறவினர்களால் சண்டை உருவாகலாம். தந்தை உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகு உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆறாம் இடத்திற்கு உரியவன் உச்சம் பெற்றுள்ளதால் வீடு, மனை வாங்கும் யோகம் வந்து இருக்கிறது.

உங்கள் ராசிக்கு ஏழாம் அதிபதியான குரு பகவான் வலு பெறுவதால் கணவன் மனைவி இடையே அந்யோன்யம் கூடும். மனதில் பக்தி உயரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வேலை பளு அதிகரிப்பதால் சிறு விஷயத்திற்கு கூட எரிச்சல் படுவீர்கள். பொறுமையுடன், நிதானமாக இருக்க வேண்டிய காலம். வீண் விவாதங்களை தவிர்த்திடுங்கள்.

மாதம் முற்பகுதியை விட பிற்பகுதியில் அலுவகத்தில் நிம்மதியான சூழல் உண்டாகும். பொருளாதாரம் உயரும் என்பதால் சிக்கனமாக செலவு செய்யுங்கள். சகோதரிகள் பக்க பலமாக இருப்பார்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொகை கைக்கு வரக்கூடும். வியாபாரம், தொழில் புரிகின்றவர்களுக்கு சூரியனால் வளர்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு உபரி வருமானம் வரக்கூடும்.

From around the web