மிதுனம் ஐப்பசி மாத இராசி பலன் 2020!
 

மிதுன ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

வேலை செய்யும் துறைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தயாரிப்பு தொழில் துறைகளில் வேலை செய்பவர்கள் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தவற்றிற்காக அனைவராலும் பாரட்டைப் பெறுவர். அது அவரின் மீது மேலும் மரியாதை கூடுவதற்கு காரணமாக அமையும். சம்பள உயர்வு கிடைக்கும்.

குடும்ப விஷயத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குழந்தை இல்லாத மிதுன ராசி தம்பதியருக்கு குழந்தை வரம் கிடைக்க வாய்ப்புண்டு.  ஒரு காரியம் செய்யும் போது ஒருமுறைக்கு பல முறை யோசித்து செய்வது நன்மையை ஏற்படுத்தும். அனைத்து விஷயங்களிலும் புத்திசாலிதானமாக நடந்து கொள்வீர்கள்.

குழந்தைகளின் படிப்பின் மீதும் உடல் நலத்தின் மீதும் கூடுதலாக அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. வெகு நாட்களாக வேலை மாற்றத்திற்காக காத்துக் கிடந்தவர்களுக்கு இம்மாதத்தில் மாற்றம் கிடைப்பதற்காக அனைத்து சாத்திய கூறுகளும் உள்ளது.

பண வரவுகள் சிறப்பாக இருக்க கூடும். கூடுதலாக வீண் செலவுகள் ஏற்படலாம். கவலை வேண்டாம். பெற்றோரின் உடல் நலத்தில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.

இம்மாதத்தில் புதிதாக வீடு வாங்க வாய்ப்புள்ளது. வீடு கட்டுவதற்கும் நிலத்தை வாங்கலாம். வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் இம்மாத்திலேயே போடுவது மிகந்த பலனை கொடுக்கும்.

From around the web