மேஷம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

இந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருக்கின்ற ராகு பெயர்ச்சியாகி மூன்றாம் இடத்திற்கும், பத்தாம் இடத்தில் இருக்கின்ற கேது பெயர்ச்சியாகி ஒன்பதாம் இடத்திற்கும் சஞ்சரிக்க போகின்றார்கள். இதுவரை நான்காம் இடத்தில் இருந்த ராகு பகவான் வீண் அலைச்சலையும், பகையும், இல்லத்தில் பிரிவையும் உருவாக்கி இருப்பார். செய்கின்ற தொழிலில், வியாபாரத்தில், குடும்பத்தில் பல வித தடைகளை சந்தித்து வந்து இருப்பீர்கள். கேது பகவான்
 
Mesham ragu kethu peyarchi 2019

இந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில்  இருக்கின்ற ராகு பெயர்ச்சியாகி மூன்றாம் இடத்திற்கும், பத்தாம் இடத்தில்  இருக்கின்ற கேது பெயர்ச்சியாகி ஒன்பதாம் இடத்திற்கும் சஞ்சரிக்க போகின்றார்கள்.

மேஷம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

இதுவரை நான்காம் இடத்தில் இருந்த ராகு பகவான் வீண் அலைச்சலையும், பகையும், இல்லத்தில் பிரிவையும் உருவாக்கி இருப்பார். செய்கின்ற தொழிலில், வியாபாரத்தில், குடும்பத்தில் பல வித தடைகளை சந்தித்து வந்து இருப்பீர்கள். கேது பகவான் 10 – ம் இடத்தில் இருந்து கொண்டு சிறு சிறு உடல் உபாதைகளை கொடுத்து இருப்பார். இனி மேஷம் ராசியினருக்கு ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு வசந்த காலம் என்றே கூறலாம்.

ராகு பகவான் மூன்றாம் இடத்தில் இருக்கும் பொழுது யோகமான பலன்களை தருவார். பொதுவாகவே ராகு, கேது போன்ற சர்ப்ப கிரகங்கள் 3,6,11 – ம் இடங்களில் கோட்சார ரீதியாக சஞ்சரிக்கின்ற காலங்களில் நற்பலன்களை வழங்க கடமைப்பட்டு இருக்கின்றார்கள். கேது பகவான் சாதகமற்ற நிலையில் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் பண விரயம், பொருள் இழப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு எடுக்கின்ற புதிய முயற்சிகளில் தடைகளை சந்திக்க நேரிடும். கேது சனியுடன் இணைந்து தனுசு ராசியில் சஞ்சரிக்க போகின்றார். சனி பகவான் இன்னும் ஓராண்டு காலம் வரைதான் தனுசு ராசியில் இருப்பார். தனுசு ராசி குருவின் வீடு என்பதால் எவ்வித கெடுப்பலன்களும் உண்டாகாது. 

பொதுவான பலன்கள்:

தாராளமான பணவரவு வரக்கூடும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் இருக்கின்றது. இல்லத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். அக்டோபர் மாதம் 2019 தேதிக்குப் பிறகு குரு பெயர்ச்சியாகி தனுசு ராசியில் அதாவது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார வளர்ச்சி ஏற்படக்கூடும். குரு பகவான் ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருக்கும் ராகு பகவானை பார்ப்பதால் இல்லத்தில் தடைபட்ட சுப காரிய பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக முடிவடையும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இதுவரை உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் பிரிந்த உறவினர்கள் மீண்டும் உங்களின் மேன்மை புரிந்து கொண்டு இணைவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

அலுவலகத்தில் சுமாரான சூழ்நிலை இருக்கக்கூடும். சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படக்கூடும். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டிய சூழல் உருவாகும். தற்பொழுது குரு பகவான் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வேலைப்பளு, வீண் அலைச்சல், நிலையற்ற தன்மை ஏற்படக்கூடும். அக்டோபர் மாதம் குரு பெயர்ச்சிக்குப் பிறகு பணியிடத்தில் உங்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களது முக்கியமான கோரிக்கைகளை அப்பொழுது முன்வைத்தால் சாதகமான பலன் கிடைக்கும். நிலையான வேலை அமையாமல் இருந்த மேஷம் ராசியினருக்கு நல்ல வேலை அமையக்கூடும்.

வியாபாரம்/தொழில் பிரிவினர்கள்:

பண விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தாராளமான பணவரவு உண்டு. அனாவசிய செலவுகளை தவிர்த்திடுங்கள். பெரிய முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுங்கள். வியாபாரத்தில் போட்டிகள், பொறாமைகள், மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனி பகவான் 10 – ம் இடத்தின் பார்வையால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் ஆற்றல் உண்டாகும். சிலருக்கு பொருள் இழப்பு ஏற்படக்கூடும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பு செய்கிறவர்கள் நல்ல வளர்ச்சி அடைவார்கள்.

குடும்பம்:

மேஷம் ராசி பெண்கள் நல்ல வளர்ச்சி அடைவார்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். இல்லத்தில் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இல்லத்தில் பிள்ளைகளால் பெருமையான சம்பவங்கள் நிகழும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 23/5/2019 முதல் 15/11/2019-க்குள் நல்ல வரன் அமையக்கூடும்.

மாணவ – மாணவியர்கள்:

ஆசிரியர்களின் நன்மதிப்பு பெறுவீர்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சற்று முயற்சி எடுத்து படித்தால் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். வெளிநாட்டில் மேற்படிப்புக்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும்.

உடல்நலம்:

உஷ்ணம், தோல் சம்மந்தமான பிரச்சனை வரலாம்.

வணங்க வேண்டிய தெய்வம்: சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை வழிபட்டு  வாருங்கள்.

From around the web