மேஷம் நவம்பர் மாத இராசி பலன் 2020!

மேஷ ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 

கணவன், மனைவி இருவரிடையே பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிந்திருந்தால் அவர்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இம்மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அலைச்சல் சற்று கூடுதலாகவே இருக்கும். 

நிறைய நபர்களிடம் கடன் கேட்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள். ஆனால் அவர்களில் ஒரு சிலரே உங்களுக்கு உதவுவார்கள். இதிலிருந்து பலரின் உண்மையான முகத்தை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 

மேலும் இதனால் பெரும் மனக் கஷ்டத்திற்கு தள்ளப்படுவீர்கள். மகன், மகள்களை பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  தங்களை சார்ந்தவரின் உடல்நிலை சம்பந்தமாக திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புண்டு. 

அந்த பயணங்களால் அவர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணலாம். என்னதான் ஓடி, ஓடி உழைத்தாலும் பணம் கைகளில் தங்காது. அதாவது வரவுக்கு அதிகமாகத் தான் செலவு இருக்கும். உடன் பிறந்தவர்களால் சிறிது மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

பிள்ளைகளின் படிப்பு இம்மாதத்தில் சிறப்பாகவே இருக்கும். பிள்ளைகளால் நீங்கள் பெருமையடைவீர்கள். உடல்நலத்தை பொறுத்தவரையில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. வேலைப்பழு அதிகமாகவே இருக்கும். 

மிகுந்த கடவுள் பக்தியுடன் இருப்பீர்கள். நீங்கள் எதை பெரிய கஷ்டமாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது வந்த மாயம் தெரியாமல் மறைந்து போகும். மிகுந்த மன வலிமையுடன் அனைத்தையும் சமாளிக்கும் திறன் உண்டாகும்.
 

From around the web