மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2018!

மேஷம் ராசிக்கு 9,12-ம் வீட்டிற்கு அதிபதியான குரு பெயர்ச்சியாகி விருச்சிகம் ராசிக்கு வருகின்றார். குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வருகின்றார். பொதுவாக எட்டாம் இடத்தில் குரு வருவதை யாரும் சிறப்பித்து சொல்லமாட்டார்கள். எனினும் மேஷம் ராசியினருக்கு குரு எவ்வித தீமை பலன்களையும் தரமாட்டார். பொதுப் பலன்கள் : உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டின் அதிபதியான குரு எட்டாம் இடத்தில் வருவதால் செலவுகளும், பிரயாணங்களும் அதிகரிக்கும். குரு பகவான் எட்டாம் இடத்தில் இருக்கும் பொழுது குதர்க்கமான
 
Mesham guru peyarchi palangal 2018 - 2019

மேஷம் ராசிக்கு 9,12-ம் வீட்டிற்கு அதிபதியான குரு பெயர்ச்சியாகி விருச்சிகம் ராசிக்கு வருகின்றார். குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வருகின்றார். பொதுவாக எட்டாம் இடத்தில் குரு வருவதை யாரும் சிறப்பித்து சொல்லமாட்டார்கள். எனினும் மேஷம் ராசியினருக்கு குரு எவ்வித தீமை பலன்களையும் தரமாட்டார்.

பொதுப் பலன்கள் :

உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டின் அதிபதியான குரு எட்டாம் இடத்தில்  வருவதால் செலவுகளும், பிரயாணங்களும் அதிகரிக்கும். குரு பகவான் எட்டாம் இடத்தில் இருக்கும் பொழுது குதர்க்கமான பேச்சுகளை பேச வைப்பார். பேச்சில் கவனம் தேவை. உடல்நிலையில் இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கும். பணத்திற்கு பஞ்சமே இருக்காது. உங்கள் சுய  ஜாதகப்படி நல்ல தசை நடைபெற்று கொண்டிருந்தால் எதிர்பாராத விதமாக நல்லவை நடைபெறக்கூடும்.

விருச்சிகம் ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசிக்கு 2,4,12 வீட்டைப் பார்ப்பாதல் அதிக அளவில் நன்மைகள் ஏற்படக்கூடும். கையில் இருக்கும் சேமிப்பு பணம் மொத்தமாக கரையும். உங்கள் இல்லத்தில் யாருக்காவது தடபுடலாக திருமணம் செய்வீர்கள். வாகன பராமரிப்பு செலவு இருக்கக்கூடும்.  வியாபாரம், தொழில் விரிவாக்கம் செய்ய, தொடங்க பணத்தை செலவு செய்வீர்கள். மேலும் கடன் வாங்குவீர்கள். இதுவரை பல முறை முயன்றும் செய்ய இல்லாத காரியங்களை தற்பொழுது  சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேஷம் ராசியினர் எதிலும் நிதானமாக, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எளிதில் வெற்றி பெறலாம்.

கல்வி:

மேஷம் ராசி மாணவ- மாணவிகளே! உங்களது முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். தொலைத்தூர ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்கள் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கல்வியில் தடையில்லாவிட்டாலும் திடீர் நண்பர்களாகும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வீண் பழி வர வாய்ப்பு இருப்பதால் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டும்.

குடும்ப வாழ்க்கை:

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுப நிகழ்ச்சி பேச்சவார்த்தைகள் நல்ல விதமாக முடிவடையும். பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள். அவ்வப்பொழுது மனதில் இனம் புரியாத பயம் வரக்கூடும்.  தேவையற்ற சித்தனைகளை அகற்றி விடுங்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் நலன் கருதி அதிக அளவில் செலவுகள் செய்ய வேண்டி வரக்கூடும்.

வேலை/தொழில்:

உங்களது வேலை சம்மந்தமாக அடிக்கடி பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும். அயல்நாட்டில் வேலைக்கு  முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை அமையக்கூடும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

வியாபாரிகள்:

புதிய வியாபாரம் செய்வதற்கு இது ஏற்ற காலமாக இருக்கும். பணம் அதிகரிக்கும். ஒரு பக்கம் பணவரவு தாராளமாக இருந்தாலும் மறுபக்கம் அந்த பணம் எங்கு போகிறது என்பதை கூட அறியாமல் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்கு கடன் உதவி கிடைக்கும். ஏலசீட்டு, சீட்டு பிடிப்பவர்கள், பைனான்ஸ் தொழில் நடத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அயல்நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழில் நல்ல வளர்ச்சி அடையும்.

வியாபாரத்தில் புதியதாக ஒரு சில பொருட்களை சேர்த்து வியாபாரம் செய்வீர்கள். இத்தனை காலமாக இதை செய்யாமல் தவறவிட்டோமே என்ற எண்ணம் தோன்றும். சிறுதொழில் முனைவோருக்கு நல்ல லாபம் கிட்டும். குறிப்பாக உணவு கூடங்கள், உணவு பண்டங்கள் விற்பனை செய்கின்றவர்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும். வியாபாரத்திற்கு தேவையான விலையுர்ந்த பொருட்களை வாங்குவதற்கு இது ஏற்ற காலமாகும்.

பரிகாரம்:

திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானையும், குரு பகவானையும் வழிபட்டு  வந்தால் துன்பங்கள் விலகும். அங்கு செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு செவ்வாய்கிழமை தோறும் சென்று வழிபட்டு  வரலாம். மேஷ ராசிக்கு செவ்வாய் அதிபதி என்பதால் முருகன் வழிபாடு செய்ய வேண்டும்.

From around the web